சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் நீட்டிப்பால் நிறுவனங்களுக்கு அடி.. ஊதிய குறைப்பு, பணியாளர் நீக்கம் நடவடிக்கைகள் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, நாடு முழுக்க, தொழில்கள் முடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும், ஊதிய குறைப்பு, தொழிலாளர் பணி நீக்கம் போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதால் இந்திய பொருளாதாரத்தில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகள்... இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

    2வது லாக் டவுன் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எந்த ஒரு தொழிலும் நடைபெறாமல் அனைத்து துறையினருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    India fights against coronavirus, many face job loss and salary cuts

    இந்த நிலையில்தான், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எந்த ஒரு நிறுவனங்களும் பணியாளர் குறைப்பில் ஈடுபடக்கூடாது, ஊதியத்தை குறைவாக வழங்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஆனால், 28 வயதாகும் மனோஜ் என்ற பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஊழியர் இதுபற்றி கூறுகையில், நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு விளக்கமும் அதற்கு கொடுக்கப்படவில்லை. உடனடியாக கிளம்பி செல்லும்படி கூறப்பட்டது.

    இதுபோன்ற ஒரு கால சூழ்நிலையில், வேலை இல்லாமல் எப்படி மனிதர்கள் உயிர் வாழ முடியும். இது போன்ற சூழ்நிலையில் புதிதாக யார் அவருக்கு வேலை கொடுப்பார்கள். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

    குர்காமை சேர்ந்த ஒரு நிறுவனம், அவர்களது தொழில் லாபத்தில், சுமார் 90% குறைந்துவிட்டதால் ஊழியர்களை சம்பளமில்லாத, விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் சம்பள குறைப்பு, அல்லது பணியாளர் நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை.

    ஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு ஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு "பூனை"யா இல்லை.. "அது"வா??

    இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, அவர்களது ஊழியர்களில் 10% ஊதியத்தை பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

    இதுபற்றி, பஜாஜ் ஆட்டோ யூனியன் தலைவர் திலீப் கூறுகையில், 10 சதவீத ஊதிய குறைப்பு என்ற நிறுவனத்தின் நிபந்தனைக்கு நாங்கள் சம்மதித்துள்ளோம். ஏனெனில் வேலை இழப்பை விட ஊதியக் குறைப்பு பரவாயில்லை என்று நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
    விட்டாரா நிறுவனத்தின் அறிக்கையின்படி, அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 30% ஊழியர்களை ஊதியமின்றி விடுமுறை எடுப்பதற்கு அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    English summary
    Despite repeated assurances by different sectors and a request by Prime Minister Narendra Modi, job loss and salary cuts are hitting Indians hard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X