இந்திய அஞ்சல் துறை 40,889 வேலைவாய்ப்பு.. ஜிடிஎஸ் பணிக்கான ரிசல்ட் வெளியீடு.. முழுபட்டியல்!
தமிழ்நாட்டில் 3164 பணியிடங்கள் உள்பட இந்தியாவில் அஞ்சல் துறையில் 40,889 காலிப்பணியிடங்களை தேர்வு எதுவும் இன்றி நிரப்ப இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
சென்னை: இந்தியா முழுவதும் தபால் துறையில் காலியாக உள்ள 40,889 கிராமின் டக் சேவாக் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான ரிசல்ட் வெளியாகி உள்ளது.
இந்திய தபால் தறையில் 2023ம் ஆண்டில் முதல் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 40,889 காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
பிபிஎம் (Branch Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவு என 2 வகைகளில் பணிகள் நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3164 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.

விண்ணப்பங்கள் வரவேற்பு
பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் எனவும், விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை எட்டியிருக்க வேண்டும் எனவும், அதிகபட்சம் என்றால் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

எழுத்து தேர்வு கிடையாது
இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு என்பது கிடையாது. மாறாக மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி இப்போது ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு தேர்வானவர்களின் ரிசல்ட் வெளியாகி உள்ளன.

ரிசல்ட் வெளியீடு
இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இதற்கான தேர்வு முடிவுகளை indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று Shortlisted Candidates என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?
இதில் பெயர் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதன்படி பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம்/Dak Sevak பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications