இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு!
சென்னை: இந்திய விமானப்படையின் பெரிய பலம், ரஃபேல் விமானங்களாக இருக்கிறது. ஆனால், இந்த விமானங்களை வாங்கியதில் இந்தியா பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இனி வரும் நாட்களில் ரஃபேல் விமானங்களை வாங்குவதில் இந்தியா பலமுறை யோசிக்கும் என்றும், மற்ற உலக நாடுகளும் பிரான்ஸ் விமானங்களை வாங்க யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு சிக்கல்
இந்தியா, தனது விமானப்படை பலத்தை அதிகரிக்க வெளியிலிருந்து சக்தி வாய்ந்த போர் விமானங்களை வாங்கியிருந்தது. குறிப்பாக பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் விமானம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் இந்த விமானங்களை வாங்கியதில் பெரிய அளவில் லாபமில்லை என்று சொல்லப்படுகிறது.
உள்ளூர் தேவை
வெளிநாடுகளிலிருந்து நாம் போர் விமானங்களை வாங்குகிறோம் எனில், அதை உள்ளூர் தேவைக்கு ஏற்றார் போல மாற்றியமைத்துதான் நாம் பயன்படுத்துவோம். இதற்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய விமானங்களை நாம் இப்படித்தான் பயன்படுத்தி வருகிறோம். ரஃபேல் விமானங்களில் கூட, கோல்ட் ஸ்டார்ட் எனும் புதிய அம்சத்தை நாம் இணைத்திருக்கிறோம். காரணம் லடாக் போன்ற பகுதிகளில் அதிக குளிர் இருக்கும். அங்கு விமானத்தின் என்ஜினை சீக்கிரமாக ஸ்டார்ட் செய்ய இந்த அம்சம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இப்படி வெளிநாட்டு விமானங்களில் எத்தனை சதவிகிதம் மாற்றியமைக்க முடியும்? என்பதில்தான் அந்த விமானத்தை வாங்கியதால் லாபமா, நஷ்டமா என்பதை தீர்மானிக்க முடியும்.
ரஃபேல் விமானங்கள்
தற்போது ரஃபேல் விமானங்களில் நாம்மால் 60% வரை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். காரணம், இதை தயாரித்த டஸால்ட் நிறுவனம், தொழில்நுட்ப தகவல்களை ஷேர் செய்ய தயங்குகிறது. குறிப்பாக சோர்ஸ் கோட் தகவல்களை நம்மிடம் பகிர மறுத்துள்ளது. இந்தியா 114 ரஃபேல் விமானங்களை வாங்க திட்டமிட்டிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப தகவல்களை பிரான்ஸ் நிறுவனம் ஷேர் செய்ய மறுத்துள்ளது. இதன் காரணமாக, நம்மால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப இந்த விமானங்களை அதிகபட்சமாக 60% வரை மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
ரஷ்ய விமானங்கள்
ஆனால், ரஷ்ய விமானங்களில் நம்மால் 80%-100% வரை மாற்றங்களை செய்ய முடியும். எனவே ஒப்பீட்டளவில் ரஃபேல் விமானங்களை வாங்கியதில் பெரிய பிரயோஜனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே எதிர் வரும் காலங்களில் ரஷ்ய விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications