ரூபாய் மதிப்பு இழப்பு, பணவீக்கம்- இலங்கை, இத்தாலியிடம் மத்திய பாஜக அரசு பாடம் கற்கனும்... கி.வீரமணி
சென்னை: ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிற நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இத்தாலி, இலங்கையிடம் இருந்து மத்திய பாஜக அரசு பாடம் கற்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நமது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து சரிந்து தற்போது 80.5 ரூபாய் அமெரிக்க ஒரு டாலருக்கு நிகராக என்ற செய்தி நமது பொருளாதாரம் - நிதி நிர்வாக மேலாண்மை எப்படி? எங்கே? செல்கிறது என்பதையே காட்டுகிறது! முந்தைய பண மதிப்பு இழப்பு ஓரிரவு அறிவிப்பினால், ஏற்பட்ட பலாபலன் போதிய கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வராமல் ஏற்பட்ட தோல்வி என்பதோடு, ''வெளிநாட்டில் பலர் பதுக்கிய அல்லது சுவிஸ் வங்கிகளில் போன்று தங்களது பணத்தை போட்டு வைத்திருப்பதை இங்கே கொண்டு வருவோம்'' என்று 8 ஆண்டுகளுக்குமுன்பே முழங்கியது உருப்படியான சாதனை செயல்களாக மலர்ந்தனவா? இல்லை; மிஞ்சியது ஏமாற்றமே!

வேலைவாய்ப்பின்மை
ஒன்றிய அரசில் நிரப்பப்படாத பணிகள் சுமார் பத்து லட்சம் என்று அத்துறை அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்!
பண வீக்கமோ ஏழு சதவிகிதத்தையும் தாண்டி விலை வாசி உயர்வுகள் விண்ணை முட்டும் அளவுக்கு ஆகிவிட்டன. அடிப்படைப் பொருள்களுக்குக்கூட வரி உயர்வு நியாயமா? பெட்ரோல், டீசல், எரிவாயு உருளையின் விலை - இல்லத்தரசிகளின் வேதனைக்குரியதாக உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துகொண்டே வருவது - விரும்பத்தகாத நிலை - நாளும் கவலையளிக்கிறது.விவசாய விளைபொருள்களுக்குரிய ஆதார அடிப்படை விலை (M.S.P.) நிர்ணயம் இன்னமும் செயல் வடிவம் பெறவில்லையே!வர்த்தகப் பற்றாக்குறை (Trade deficit) கடந்த ஜூன் மாதம் முதல் அதிகரித்து வருகிறது!

வர்த்தகப் பற்றாக்குறை
வெளிநாடுகளுக்கு நாம் விற்கும் பொருள்களுக்கு அதிகமாகவே வெளிநாடுகளிலிருந்து நாம் வாங்கும் நிலை - இறக்குமதிக்காக செலவிடும் பணம் அதிகமாகவும், ஏற்றுமதிமூலம் செலவிடும் தொகைக்கிடையே உள்ள வித்தியாசம்தான் இந்த ‘வர்த்தகப் பற்றாக்குறை' என்பது. ‘‘இது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், கடந்த மாதம் (ஜூன்) இறக்குமதிக்காகக் கிடைத்த தொகைக்கும், ஏற்றுமதிமூலம் கிடைத்த தொகைக்கும் இடையில் உள்ள பள்ளம்‘' - வித்தியாசம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 399 கோடியாகும். இதற்குமுன் எப்போதும் இப்படி ஏற்பட்டதில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

ரூபாய் மதிப்பு
இந்த ரூபாய் நிகர மதிப்பு - டாலருக்கு நிகராக ரூ.80.5 ஆக மேலும் மேலும் நாளும் நாளும் சரிவதன்மூலம் நமது நாட்டிற்கு முதலீடு செய்து, தொழில் தொடங்க வரவிருப்போரும் யோசித்துத் தயங்கவே செய்வார்கள்! ஜெர்மனும், ஜப்பானும் எப்படி மீண்டன? இரண்டாம் உலகப் போரில், மிகவும் பாதிக்கப்பட்டு கீழிறக்கத்திற்குச் சென்ற இரண்டு நாடுகள் ஜெர்மனியும், ஜப்பானும்தான்! ஆனால், அதற்குப் பிறகு அதிலிருந்து அவை மீண்ட வரலாற்றில் அவர்கள் தங்கள் நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக உயர்த்தி அவற்றை Hard Currencies (ஜெர்மன் ‘மார்க்‘ - ஜப்பானிய ‘யென்') என்ற அளவில், தொழில் வர்த்தகத்தில் மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் அவை இருந்தன என்பது பொருளாதார வரலாற்றுப் பாடங்கள் ஆகும்! குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தவர்தானே!

ஜிஎஸ்டி வரி
மாநிலங்களின் நிதிநிலை அதிகாரத்தில் முக்கியப் பங்கு வகித்த விற்பனை வரி வசூலிக்கும் உரிமையைப் பறித்து, ஒன்றிய அரசு தன்வசம் வைத்து, முழு வசூலை நடத்தி, பிறகு அவ்வப்போது மாநிலங்களுக்குத் தங்கள் மனம்போல் பகிர்ந்தளிப்பது, அதிலும் தாமதம் காட்டுவதுபற்றி இன்றைய பிரதமர், அன்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எவ்வளவு கடுமையாக இந்த ஜி.எஸ்.டி. வரிமுறையை - ஒன்றிய அரசு சட்டமாக்குவதை எதிர்த்தார் என்பது மறந்துவிட்டதா? எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் ஜி.எஸ்.டி. வரி வசூல்மூலம் கிடைக்கும் தொகை பெரும் அளவில் பல கோடி பெருகிய நிலையில், மேலும் மேலும் ஏழை, எளிய, நடுத்தர, சாமானிய மக்களின் இடுப்பை உடைக்கும் வகையில், பாக்கெட் அரிசி, பாக்கெட் தயிர் போன்றவற்றிற்குக்கூட ஜி.எஸ்.டி. வரி என்றால், அது பரிதாபத்திற்குரிய கொடுமையல்லவா? பாக்கெட் செய்து விற்றால் வரி, பாக்கெட் செய்யாமல் விற்றால் வரி இல்லை - இது என்ன அணுகுமுறை? அதே பொருள் தனியாக - பாக்கெட் செய்யாமல் விற்றால் வரி இல்லை; பாக்கெட் செய்து விற்றால் வரி என்றால் நியாயம்தானா? இதில் என்ன அணுகுமுறை இருக்கிறது? சுகாதாரக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், தரமானவற்றை பாக்கெட் செய்து விற்பது தூய்மைக்கேடு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்! அதற்குத் ‘‘தண்டனை'' தருகிறதா ஒன்றிய அரசு? விலைவாசி நாளும் உயர்ந்து மக்களை அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் விடும்படிச் செய்திடும் நிலையில், இப்படி மேலும் மேலும் துன்பப்படுத்துவது எவ்வகையில் ஏற்கத்தகுந்தது?
Recommended Video

இலங்கை, இத்தாலி
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நிலையிலிருந்து பாடம் கற்கவேண்டாமா? இலங்கையில் ஏற்பட்ட அந்நாட்டு மக்கள் எழுச்சி, முந்தைய ஆட்சியாளர்களான ராஜபக்சே, கோத்தபய வம்சாவளியை, இரவோடு இரவாக வெளிநாடுகளுக்குப் பறக்கிற - தஞ்சம் தேடி அலையும் நிலை போன்று நம் நாட்டிற்கு வராமல் தடுக்க மக்களின் மனவேதனையை அணைக்கும் யதார்த்தத்தை மறந்து, ‘எல்லாம் சரியாக இருக்கிறது' என்று சமாதானப் பிரசங்கம் செய்துகொண்டே இருந்தால் நிலைமை சீரடைந்துவிடுமா? வரலாற்றிலிருந்து அண்டை நாடு இலங்கையோடு, இப்போது இத்தாலியும் சேர்ந்துள்ளது; முன்பு துருக்கியும் பாடம் எடுத்தது; இதிலிருந்து நாம் பாடம் கற்று, வருமுன்னர் காக்க, மக்கள் அதிருப்தி - அவதி நிலை - வடிக்கும் கண்ணீரைத் துடைக்காமல் இருப்பது ‘‘குறைந்த அரசு; நிறைந்த ஆளுமை'' என்று கூறி, பதவியைப் பிடித்த பா.ஜ.க.வுக்கு அழகாகுமா? பத்திரிகை சுதந்திரத்தில் உலக மொத்த நாடுகள் 180 இல் இந்தியாவுக்கான இடம் 150 பத்திரிகை சுதந்திரம் உள்ள மொத்த நாடுகள் 180 இல், நமது நாடு 150 ஆவது இடத்தில் இருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணை எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது ஒன்றிய அரசு என்பதைத்தானே விளக்குகிறது! பிற நாட்டு அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகி, நம் மக்களுக்கு உரிய விடியல் கிட்டவேண்டும் - ஆட்சியாளர்கள் இணக்கமாக சிந்திக்கத் தவறக் கூடாது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications