ஏர்போர்ஸுக்கு உதவ போகும் 2,250 கிலோ சாட்டிலைட்.. தெறிக்கவிடும் இஸ்ரோ பிளான்!
இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 'ஜிசாட்-7ஏ', செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 'ஜிசாட்-7ஏ', செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 'ஜி.எஸ்.எல்.வி- எப் 11' ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

2250 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இதில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும், இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைகோள் மூலம் இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இணைக்கலாம்.

'இன்சாட் 4சிஆர்' செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் முடிகிறது, அதற்கு மாற்றாக 'ஜிசாட்-31' என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஜிசாட் 7 மற்றும் ருக்மணி ஆகிய செயற்கை கோளை இந்திய கடற்படைக்காக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி இருந்தது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications