சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு நாளான டிச.6ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: பாபர் மசூதி இடிப்பு நாளான டிச.6ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.

இந்துத்வா அமைப்புகள் மதுராவில் உள்ள ஈத்கா ஷாஹி மஸ்ஜிதை இடிப்போம் எனக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக அந்த அமைப்பு வேதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பக இந்திய தவ்ஹீத் ஜமாத் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மசூதி போல் தோற்றம்.. புல்டோசரால் இடிப்பதாக எச்சரித்த பாஜக..இரவோடு இரவாக மாறிப்போன பஸ் நிறுத்தம் மசூதி போல் தோற்றம்.. புல்டோசரால் இடிப்பதாக எச்சரித்த பாஜக..இரவோடு இரவாக மாறிப்போன பஸ் நிறுத்தம்

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித்

அயோத்தி பாபரி மஸ்ஜித் -ராம ஜென்ம பூமி நில உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 9-11-2019 அன்று உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிற நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்த தீர்ப்பாகும். அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணாக அநீதியாக வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை இந்திய முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அலஹாபாத் நீதிமன்றம்

அலஹாபாத் நீதிமன்றம்

கடந்த 2010ல் அலஹாபாத் நீதிமன்றம் இதே வழக்கில், சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டு விட்ட 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒன்றை முஸ்லிம் தரப்பிற்கும் இரண்டு பகுதிகளை இந்துத்துவா தரப்பிற்கும் வழங்கி தீர்ப்பளித்திருந்தது.இதுவும் சட்ட அமைப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு என முஸ்லிம்கள் அதனை புறந்தள்ளினார்கள்.

நம்பிக்கையை தகர்க்கும்

நம்பிக்கையை தகர்க்கும்

சட்ட நெறிமுறைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இது அநியாயமான தீர்ப்பு என்று கூறி அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் அமைந்தது. சட்டத்தின் அடிப்படையில்,ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் இந்த அடிப்படையை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது.

அரசியல் சாசன பெஞ்ச்

அரசியல் சாசன பெஞ்ச்

இதன் மூலம் அரசியல் அமைப்பு உறுதி படுத்தியிருக்கும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை கேள்விக்குரியகியுள்ளது. பாபரி மஸ்ஜித் - ராமெஜன்ம பூமி நில வழக்கின் இறுதித் தீர்ப்பின்போது, அயோத்தியில் (2.77 ஏக்கருக்கு வெளியே) அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கரை சொந்தமாக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நபர் அரசியல் சாசன பெஞ்ச் கூறியது. ஆயினும்,அயோத்திக்கு பல கி்.மீ தூரத்தில் அந்த நிலம் ஒதுக்கித் தரப்பட்டது..உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிபடியும் கூட இது அமையவில்லை.அனைத்து வகையிலும் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஈத்கா ஷாஹி மஸ்ஜித்

ஈத்கா ஷாஹி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித் இழப்பு இந்திய முஸ்லிம்களுக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,எதிர்வரும் டிசம்பர் 6, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளை முன்னிட்டு இந்துத்வா அமைப்புகளும் நாட்டை ஆளும் பிஜேபியின் தலைவர்களும் மதுராவில் உள்ள ஈத்கா ஷாஹி மஸ்ஜிதை இடிப்போம்,அங்கே கிருஷ்ணருக்கு சிலை வைப்போம் எனக்கூறி சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை உருவாக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றன.இதனை மாநில, ஒன்றிய அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

இதனைக கண்டிக்கும் வகையிலும்,பாபரி மஸ்ஜித் நிலத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும்,தற்போது அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு தடைவிதிக்கக் கோரியும் எல்லாவற்றுக்கும் மேலாக,நீதிபதி லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிச 06 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

English summary
India Tawheed Jamaat of India has announced that a protest will be held across Tamil Nadu on the day of the demolition of the Babri Masjid, December 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X