இதுதான் தேவை.. பாகிஸ்தான் கழுத்தை நெரிக்க போகும் இந்தியா.. ஆட்டம் காலி.. பக்காவான பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானின் கழுத்தை பொருளாதார ரீதியாக நெருக்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலக வங்கியையும் , தீவிரவாதத்திற்கு உலக நாடுகள் பணம் தருகிறதா என்பதை கண்காணிக்கும் Financial Action Task Force அமைப்பையும் இந்தியா இதற்காக நாட உள்ளது.

இத்தனை காலம் Financial Action Task Force அமைப்பின் கிரே லிஸ்டில் பாகிஸ்தான் இருந்தது. அதாவது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பணம் தருகிறது என்பதாக சந்தேகிக்கப்படும் லிஸ்டில் பாகிஸ்தான் இருந்தது. சமீபத்தில்தான் அந்த லிஸ்டில் இருந்தே பாகிஸ்தான் வெளியே வந்தது. மீண்டும் அந்த லிஸ்ட் உள்ளே பாகிஸ்தானை கொண்டு செல்ல இந்தியா காய் நகர்த்த உள்ளது.

அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு முதலீடுகள் வராது. ஏற்றுமதி இறக்குமதி குறையும். அவர்களின் பொருளாதாரம் நாசம் அடையும். பாகிஸ்தான் ஜூன் 2018 இல் FATF 'கிரே லிஸ்டில்' சேர்க்கப்பட்டது. இருப்பினும், பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2022 இல் அது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை சிறையில் அடைத்து சொத்துக்களைப் பறிமுதல் செய்ததாகவும் பாகிஸ்தான் கூறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை மீண்டும் அந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு தேவையான வேலைகளை செய்ய இந்தியா களமிறங்கி உள்ளது.

மீண்டும் கடன் கேட்கும் பாகிஸ்தான்

சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த 24 மணி நேரத்தில் கடன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக அந்நாட்டிற்கு கடன் கிடைக்காமல் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவது வழக்கம். கடந்த 2 வாரம் முன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றது. பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவால் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. இதனை அடுத்து தங்களுக்கு உடனடியாக 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

India to choke Pakistan financially with its master plan against them

இதற்கு அதிக நிதியை வழங்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிதி வழங்க ஒப்புக்கொண்டு வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் ரூ.500 கோடி நிதி உட்பட 8,500 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்க உள்ளது. 2024-25 நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வெறும் 2.68% மட்டுமே வளர்ச்சியடைந்தது. இது அதன் இலக்கான 3.6% ஐ விடக் குறைவு.

நாட்டின் பொருளாதார உற்பத்தி 411 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, தனிநபர் வருமானம் 1,824 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆனால் இது வைக்கப்பட்ட டார்கெட்டை விட பல மடங்கு குறைவு. முதல் மூன்று காலாண்டுகளில் விவசாயம் 1.8 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் தொழில்துறை துறை 1.14 சதவீதம் சரிந்தது. இதெல்லாம் வளர்ச்சி என்று பார்த்தாலும் டார்கெட்டை விட குறைவு.

அடுத்த நிதியாண்டில் (FY2025-26) வெளி நாடுகளிடம் இருந்து பொருளாதாரத்தை சமாளிக்க பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளது. 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட பாகிஸ்தான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கடன் வாங்க உள்ளனர். கடுமையான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல், வணிக வங்கிகளிடமிருந்து 7-8 சதவீத வட்டி விகிதத்தில் 2.64 பில்லியன் அமெரிக்க டாலர்களை குறுகிய கால கடன்களாகப் பெற பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடன் தரக்கூடாது

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் தரக்கூடாது என்று இந்தியா நெருக்கடி கொடுக்க உள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் தனது ஏமாற்றத்தை நேரடியாக IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் தெரிவித்ததுடன், போர் போன்ற சூழ்நிலையில் இந்த பண உதவி எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

உலக நாடுகள் வழங்கும் இந்த பணம் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாக உலக வங்கியிடம் புகார் அளிக்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இதற்காக இந்தியா புகார்களை அளிக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+