தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு இல்லை- ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் மட்டும் திறப்பு!
சென்னை: நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க மார்ச் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்துமே மூடப்பட்டன.

சுமார் 80 நாட்களுக்குப் பின்னர் இன்று நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் ஷாப்பிங் மால்களை திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனடிப்படையில் நாட்டின் பல இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆனால் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் இன்று திறக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்து வருவதால் இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 3-ந் தேதியும் இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இருந்தது. அதேநேரத்தில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் முழு வீச்சில் இன்று காலை முதல் திறக்கப்பட்டன. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications