அமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது!
அமெரிக்கா சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போர் காரணமாக சென்னை ஒரு வகையில் பெரிய பலன் அடைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
சென்னை: அமெரிக்கா சீனா இடையில் நடந்து வரும் வர்த்தக போர் காரணமாக சென்னை ஒரு வகையில் பெரிய பலன் அடைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.
ஆனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீதான வரியை குறைத்துவிடும். ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை.

என்ன சொல்கிறது
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார்.
இதுதான் வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது.

என்ன தொடக்கம்
இதனால் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு நாட்டிலும் எதிரி நாட்டு எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது.

சிக்கல்
இதனால் உலகம் முழுக்க இருக்கும் எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக சீனாவில் அமெரிக்க நிறுவனங்களால் இயங்க முடியவில்லை. அதேபோல் அமெரிக்காவில் சீனாவின் நிறுவனங்களால் இயங்க முடியவில்லை.

வர வைக்கிறது
இதனால் பாதிக்கப்படும் நிறுவனங்களை இந்தியாவில் கடை விரிக்க அழைக்க உள்ளது மத்திய அரசு. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. ஆப்பிள்,பாக்ஸ்கார்ன், விஸ்டர்ன் கார்ப் ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஆப்பிள் விரைவில் இந்தியாவில் தனது அலுவலகத்தை தொடங்க வாய்ப்புள்ளது.

என்ன கூகுள்
இதில் ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் தனது நிறுவனத்தை தொடங்கும். அதே சமயம் கூகுள் சீனாவில் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் பேசி, கூகுள் நிறுவனத்தை தென்னிந்தியாவில் சென்னை அல்லது அமராவதிக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

எப்போது
சென்ற வாரமே சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த வாரம் வரை இந்த பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முக்கிய நிறுவனங்கள் இதனால் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது.

சென்னை எப்படி
அதேபோல் போக்ஸ்வேகன், ஹூண்டாய் மோட்டார் கோ, ஹோண்டா மோட்டார் கோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளது. இதனால் இந்த ஆட்டோமொபைல் நிறுவங்களின் ஆசிய தலைமையகம் சீனாவில் இருந்து சென்னைக்கு மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

செம பயன்
ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் உலக நிறுவனங்களின் குறியாக உள்ளது. தற்போது நடக்கும் வர்த்தக போரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications