“இந்தியன் 2” சேனாபதி பின்பற்றும் டயட்.. நீண்ட காலம் உயிர்வாழும் வித்தை.. திருமந்திரம் சொல்வது என்ன?
சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் திருமந்திரம் நல்குரவு பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பசியை அடக்கும் வாழ்க்கை முறை பற்றி திருமந்திரம் குறிப்பிடுவதை சேனாபதி பின்பற்றுவதாக இந்தியன் 2 கதையில் இடம்பெற்றுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்' திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. லஞ்சம் ஊழலுக்கு எதிரான படமான இந்தியன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படத்தின் புதிய ப்ரோமோவில் பாபி சிம்ஹா பேசும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருமந்திரம் நல்குரவு பற்றி பேசுகிறார் பாபி சிம்ஹா. சேனாபதி தியானம், தூக்கம் என எல்லாவற்றையும் மிகச்சரியாக கடைபிடிக்கும் வாழ்க்கை முறையாக வாழ்கிறார் என கமல்ஹாசன் கேரக்டர் பற்றிச் சொல்கிறார் பாபி சிம்ஹா.
மேலும், திருமந்திரத்தில் நல்குரவில் இது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் பாபி சிம்ஹா பேசுகிறார். இந்தியன் 2 படத்தில் திருமூலர் இயற்றிய திருமந்திரம் நல்குரவு பற்றி பேசப்பட்டிருப்பது ரசிகர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.

திருமூலர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. யோகியான திருமூலர், பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்தவர் என்று நம்பப்பகிறது. அவர் தான் கற்ற வித்தைகளை உபாயங்களாக தெரிவித்துள்ளார். அதில் சிறப்பான வாழ்க்கை முறைகளுக்கான பயிற்சிகள் விளக்கப்படுகின்றன.
திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில் பசி, வறுமை பற்றி பேசப்பட்டுள்ளது. கல்லால் ஆன குழியை எப்படி தங்கத்தால் நிரப்ப முடியாதோ, அதுபோல, வயிற்றுப் பசியை எத்தனை வகையான செல்வம் சேர்த்தாலும் நிரந்தரமாக தீர்த்து விடமுடியாது, நிரந்தரமாக பசியை தீர்ப்பது எப்படி என்ற அறிவை தெரிந்துகொண்டுவிட்டால் அதன் மூலம் இனி பசியே வரமால் இருக்கும்படி ஆன்மாவின் அனைத்து அழுக்குகளும் நீங்கு பெருவாழ்வு கிடைத்துவிடும் என்கிறது திருமந்திரம் நல்குரவு.

இதனைத்தான் "இந்தியன் தாத்தா" சேனாபதி பின்பற்றி வாழ்வதாக இந்தியன் 2 படத்தில் விவரிக்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் பசி, உணவு பழக்க வழக்கங்கள், நீண்ட காலம் வாழ்வதற்கான வாழ்க்கை முறையை பற்றி திருமந்திரம் கூறுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications