Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்பமாகி விழுந்த பாகிஸ்தானின் 50 டிரோன்கள்.. வானத்திலேயே வழிமறித்து காலி பண்ண இந்திய ராணுவம்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இதில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. அந்தவகையில், பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ராணுவம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.. இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆவர்.. இதற்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ஆபரேஷனை இந்தியா நடத்தி வருகிறது..

Pakistan 50 drones Indian army 50


ராணுவ தாக்குதல்

பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே நுழைந்து 9 பயங்கரவாதி முகாம்களை அழித்தது. உடனே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தவும், 16 பேர் வரை உயிரிழந்தனர். நேற்றிரவு இந்திய எல்லையோர நகரங்களில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.. இந்த அனைத்து தாக்குதலையும், இந்தியா ராணுவம் முறியடித்தது.. பாகிஸ்தானின் அத்துமீறலை இந்திய ராணுவம் தன்னுடைய வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

போர் விமானம் விமானி கைது

ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடந்தது..

இந்த நிலையில் பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது..

விடிய விடிய அதிரடி

குறிப்பாக, உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.. பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலைத்தான் இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இந்த டிரோன்களை அழிக்க ராணுவம் பல்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது..

இரவில் பாக் நடத்திய தாக்குதலை முழுமையாக முறியடித்ததாக ராணுவமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. L70 துப்பாக்கி, Zu-23mm, ஷில்கா அமைப்புகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு கவசங்கள் மூலம் இந்த பதிலடியை இந்தியா தந்துள்ளது.. அனைத்து டிரோன்களையும் வானிலேயே வீழ்த்தியதாகவும், தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது..

ராணுவம் அறிக்கை - வீடியோ

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் போர் நிறுத்த மீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதிபூண்டுள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் பதிலளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது..

அத்துடன், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாகிஸ்தான் ட்ரோனை எப்படி நடுவானில் வீழ்த்தின என்ற வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் ஷேர் செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+