’3.3 ஆண்டுகள்’ மீண்டு வந்த காயம்பட்ட சிங்கம்.. சதம் விளாசிய டெஸ்ட் கிரிக்கெட் தூதுவன் விராட் கோலி!
3 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
சென்னை: 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி சதம் விளாசி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகள், 3 மாதங்கள், 17 நாட்களுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 50க்கு கீழ் குறைந்த போது ரசிகர்கள் அடைந்த துன்பங்களுக்கு, மருந்தாக அமைந்துள்ளது இன்றைய நாளின் சதம்.
இன்னும் சொல்லப் போனால் இந்த தசாப்தத்தில் முதல்முறையாக இந்திய ஆடுகளத்தில் 200 பந்துகளை கடந்து விராட் கோலி விளையாடியுள்ளார். சரியாக 242 பந்துகளில் விராட் கோலி தனது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.

விராட் கோலி சதம்
சதம் விளாசிய போது விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 41.12 மட்டுமே. 100 ரன்களில் வெறும் 5 பவுண்டரிகள் மட்டுமே விளாசிய விராட் கோலி, 80 ரன்களை ஓடியே எடுத்துள்ளார். ஒவ்வொரு பந்திலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல், விக்கெட்டிற்கு மதிப்பளித்து விளையாடியதன் விளைவு தான் விராட் கோலி சதம் விளாசியதற்கு முக்கிய காரணம்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்
என்னதான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் விளாசி இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் தான் விராட் கோலியின் நிஜமான களம். அதனால் தான் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட அதீத ஆர்வம் கொண்டிருப்பார். அதன் காரணமாக தான் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவனாக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்தனர்.

சொதப்பிய கோலி
அப்படியான தூதுவன் மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசாமல் இருந்தது ரசிகர்களை இன்னும் சோதித்தது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசவில்லை என்பதோடு, அவர் செட் செய்து வைத்துள்ள ஸ்டாண்டர்டை அவரால் தொட முடியாமல் இருந்ததே பெரிய அடியாக பார்க்கப்பட்டது.

ஆஸி. பவுலர்கள்
ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியதில் இருந்து விராட் கோலி அதிக கவனத்துடன் விளையாடினார். ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்த போது, மிடில் பேட்டில் பந்தை எதிர்கொண்டார். இந்தூர் மற்றும் டெல்லியில் சிறப்பாக விளையாடியும் ஒரேயொரு தவறால் விக்கெட்டை பறிகொடுத்தார் விராட் கோலி.

இன்னும் ஒரேயொரு இன்னிங்ஸ்
ஆனால் அகமதாபாத்தில் விராட் கோலி ஆடிய ஆட்டம் இன்னும் சிறப்பானது. லயன், குன்னேமன், டாட் மர்ஃபி என அனைத்து சுழற்பந்துவீச்சாளர்களையும் எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டார். இன்னும் சொல்லப் போனால், அவர்களால் விராட் கோலிக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்த முடியவில்லை. அடுத்ததாக விளையாட உள்ள டெஸ்ட் போட்டியில் இதே போன்று சிறந்த இன்னிங்ஸை ஆடினால், கோலியின் கனவும் நிறைவேறும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications