கொஞ்சம் மிஸ்ஸானாலும் ஆளே காலி.. இந்திய ரயிலில் ஏசி கோச்சில் உள்ள பெரிய பிரச்சனை! ஜாக்கிரதை
சென்னை: மிகவும் ஆபத்தான முறையில் வடிவமைக்கப்பட்ட முதலாம் வகுப்பு ஏசி ரயில் பெட்டியின் டிசைன் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தான வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். இதில் உள்ள சிக்கல் என்ன.. நெட்டிசன்கள் ஏன் இதை விமர்சிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்து ரயில்கள் தான். ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் முதலாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றின் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஏசி பெட்டிகள்
பொதுவாகவே ரயில்களில் ஏசி பெட்டிகளில் உள்ளுக்குள்ளேயே இரண்டு பக்கமும் கதவுகள் இருக்கும். ஏசி கூலிங் வெளியே செல்லாமல் இருக்கவே இந்த உட்புறக் கதவை அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த ஏசி பெட்டியில் உட்புறக் கதவு, நேரடியாக வெளிப்புறக் கதவுக்கு மிக அருகே இருக்கிறது. லேசாக தூக்கக் கலக்கத்தில் யாராவது இந்தக் கதவைத் திறந்தாலும் தடுமாறி வெளியே விழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் இந்த வீடியோ இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சவுகரியமாகச் செல்ல வேண்டும் என முதலாம் வகுப்பு ஏசியில் செல்வோரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த ரயில் பெட்டிகள் இருப்பதாகப் பலரும் சாடி வருகிறார்கள்.
என்ன டிசைன் இது
இந்த ரயிலின் கதவு வடிவமைப்பு எந்த ஒரு அடிப்படை பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஒரு பயணி தூக்கக் கலக்கத்தில் இரவு நேரத்தில் எழுந்து டாய்லெட் போகும்போது அல்லது அவசரத்திலோ இந்தக் கதவைத் திறந்தால் நேராக வெளியே தடுமாறி விழும் விபரீதம் ஏற்படுத்தக்கூடும்.
இது ஏதோ சிறிய டிசைன் பிரச்சினை இல்லை.. சிறு தடுமாற்றம் கூட ஒரு பயணியின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு இதில் அபாயம் ஒளிந்துள்ளது. இத்தகைய ஆபத்தான டிசைனை உருவாக்கியவர் யார் என்று நெட்டிசன்கள் சாடி வருகிறார்கள். மேலும் எப்போதும் ரயில் பெட்டிகள் எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பயன்பாட்டிற்கு வந்துவிடாது. பல கோடி மக்களின் உயிர் தொடர்பானது என்பதால் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே செயல்பாட்டிற்கு வரும். அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய குறைபாடு கொண்ட டிசைன் எப்படி பலகட்டத் தரச் சோதனைகளைக் கடந்து என்பதும் புரியாத புதிராக உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
Who creates such Engineering marvel 🤡 pic.twitter.com/EuOxkWYWaE
— 🚨Indian Gems (@IndianGems_) January 24, 2026
நெட்டிசன்கள் தாக்கு
பொதுவாகவே ரயில் டிக்கெட் கட்டணம் பேருந்தை விட குறைவாக இருந்தாலும் முதலாம் வகுப்பு ஏசி பெட்டிகளின் டிக்கெட் நேர்மாறாகவே இருக்கும். முதலாம் வகுப்பு ஏசி பெட்டிகளின் (1AC) பயணக் கட்டணம் என்பது கிட்டத்தட்ட விமானப் பயணக் கட்டணத்திற்கு இணையானது; சில நேரங்களில் அதைவிடவும் அதிகமாக இருக்கிறது. இவ்வளவு அதிகக் கட்டணம் செலுத்தும் ஒரு பயணி முதலில் எதிர்பார்ப்பது பாதுகாப்பைத் தான். ஆனால், விமானத்திற்கு நிகரான கட்டணத்தை வசூலித்துவிட்டு, இவ்வளவு அபத்தமான மற்றும் ஆபத்தான டிசைன் கொண்ட பெட்டிகளை இயக்குவதை ஏற்கவே முடியாது என நெட்டிசன்கள் சாடி வருகிறார்கள்.
நடவடிக்கை தேவை
இந்திய ரயில்வே சார்பில் வந்தே பாரத் உள்ளிட்ட பல புதிய அதிநவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவை தரத்திலும் வேகத்திலும் வேற லெவலில் இருப்பதாகப் பயணிகளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மற்ற ரயில்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். நீங்க இந்த டிசைன் பற்றி என்ன நினைக்கிறீங்க?
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications