உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்களே! முஸ்லீம் லீக் பக்ரீத் பெருநாள் வாழ்த்து!
சென்னை: உலகிலேயே உதவும் குணத்தில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள் தான் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளில் ஒற்றுமை பேணிடவும், ஒழுங்கு முறையில் வாழ்ந்திடவும்,அமைதியை உருவாக்கிடவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவு பெருகிட பாடுபடவும், உறுதி ஏற்போம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;
''இன்றைய உலகில் வாழும் 800 கோடி மக்களில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை-ஈதுல் அல்ஹாவை-ஹஜ் பெருநாளை-தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்திய முஸ்லிம்கள், "ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா - பாருக்குள்ளே உள்ள நாடுகளில் சிறந்தது இந்தியா" என்று நம்பி வாழும் பெருங்கூட்டம் ஆகும்.
இந்தியா ஆன்மீக பூமி, அமைதியின் பிறப்பிடம்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று பரப்புரை செய்யும் புண்ணிய பூமி, இங்கே வாழும் 4,698 வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் யாவரும், இந்திய மக்கள் ஆவர்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் உன்னதமான குடிமக்கள். இந்திய மக்களைப் போல் எங்கும் இல்லை; உலகில் வேறு எவரும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளவர்களே இந்த நாட்டு மக்கள். அங்கங்கே சிலர் சில வேண்டத்தகாத குழப்பங்கள் நிகழ்வதைக் கண்டு, இந்திய மக்களின் வாழ்வைப் பற்றி தவறான கருத்துச் சொல்லக்கூடாது.
இந்திய மக்கள் ஒருதாய் மக்கள்; பல மொழி, பலமதம், பல கொள்கை, பல கலாச்சாரம் உள்ளவர்கள்; ஆனால், மனிதநேயத்தில், மனிதாபிமானத்தில், உதவுவதில், உபசரிப்பதில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில், எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதில் இந்தியர்களுக்கு இணை இந்தியர்கள்தாம்.
இத்தகைய சிறந்த நாட்டு மக்களாக வாழும் முஸ்லிம் சமுதாயம், தனது ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறது. ஈத் பெருநாள் வாழ்த்துக்களை எல்லோருக்கும் கூறுவோம். இந்தியத் திருநாடு ஜி-20 தலைமை வகிக்கும் இந்த ஆண்டில் உலக அமைதிக்கும் குரல் கொடுத்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் போரால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானதாகும்.
இந்திய முஸ்லிம்கள் தங்களின் தியாகத் திருநாளில் செய்யும் பிரார்த்தனையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடரும் போரை நிறுத்திடவும், அமைதிவழியில் ஆக்கப்பூர்வ பயணத்தில் உலகை இட்டுச் செல்லவும் வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம். ரஷ்ய அதிபர் புதின், இந்திய முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் பிரார்த்தனைக்கு உடன்படவும் வேண்டுவோம்.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications