நர்ஸை பார்த்தாலே.. எகிறி குதித்து கரும்பு தோட்டத்துக்குள் ஓட்டம்.. என்னாச்சு.. கோவையிலா இப்படி..?
பழங்குடி மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுகிறார்களாம்
சென்னை: நர்ஸ்களை பார்த்தாலே எகிறி குதித்து ஓட்டம் பிடிக்கும் பழங்குடி மக்களை நினைத்துதான் சுகாதாரத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.. என்ன காரணம்?
கடந்த 2 மாதமாக சென்னையை விட மிரட்டி கொண்டிருப்பது கோவைதான்.. தொற்று மிக அதிகமாகிவிட்டது.. கோவையை காப்பாற்றுங்க என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கோவைக்கு பயணம் செய்து தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. இதனிடையே லாக்டவுன் போட்டுவிடவும், அது மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியது.

முகாம்கள்
இதனிடையே, தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர்... சுகாதார அதிகாரிகளும் சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வருகிறார்கள்.. தற்போது மெல்ல மெல்ல கோவை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு தடுப்பூசி என்றாலே பயமாக இருக்கிறதாம்..

பிரச்சனை
தடுப்பூசி செலுத்தி கொள்ள அவர்கள் முன்வருவதுமில்லை.. இவர்கள் மட்டுமில்லை, இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் உள்ள பழங்குடி மக்கள், தடுப்பூசிக்கு இப்படித்தான் பயப்படுகிறார்கள்.. தடுப்பூசி செலுத்தி கொண்டால், உடலில் நிறைய பிரச்சனைகள் வந்துவிடும் என்ற எண்ணம் ஆழமாக இருப்பதாலேயே இவர்களின் பயமும் நீடித்து வருகிறது.

கோவை
கோவை மாவட்டத்தில் இவர்கள் யாரும் ஊசி போட்டுக் கொள்ள வராததால், இவர்கள் வாழும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.. அப்படித்தான் நேற்றுகூட சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், 500 தடுப்பூசிகளுடன் தொண்டாமுத்தூர் அடுத்துள்ள முள்ளாங்காடு மலை கிராமத்துக்கு சென்றனர். தூரத்தில் நர்ஸ்கள், சுகாதாரத்துறையினர் வருவதை பார்த்த பழங்குடியின மக்கள், வீடுகளை பூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் கரும்பு தோட்டம் உள்ளிட்ட மறைவிட பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

அதிகாரிகள்
. ஒன்றிரண்டு பேர் வீடுகளுக்குள் இருந்தனர்.. ஆனால், அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, கதவையே திறக்க மறுத்தனர்.. ஒவ்வொரு வீடாக சென்று, தடுப்பூசி குறித்த நன்மைகளை சுகாதாரத்துறையினர் எடுத்து சொல்லியும், பெரும்பாலானோர் வரவே இல்லை.ரொம்ப நேரமாக வீட்டுக்கு வெளியிலேயே அதிகாரிகள் காத்திருந்தனர்.. அதற்கு பிறகு ஒவ்வொருவராக வந்தனர்..

தண்ணீர்
ஆனால், வெறும் 57 பேர் மட்டும் வந்து ஊசியை போட்டுக் கொண்டனர்.. இந்த பகுதியில் 600 பேர் இருக்கிறார்களாம்.. மீதமுள்ளவர்கள் எல்லாம் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்துவிட்டனர்.. இதனால், சுகாதாரத்துறையினர், அங்கிருந்து கிளம்பி காருண்யா நகர் அருகே உள்ள பட்டியால் கோவில்பதி மலை கிராமத்திற்கு சென்றனர்..

பிரச்சாரம்
தூரத்தில் நர்ஸ்கள் வருவதை பார்த்த இந்த மக்களும் ஓடிஒளிந்து கொண்டனர்.. அந்த கிராமத்தில் ஓரிரு பெண்கள் மட்டும் குழாய்களில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர்... அவர்களை ஊசி போட்டுக் கொள்ளுமாறு அழைத்தால், அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கே வந்துவிட்டனர்.. இறுதியில் வெறும் 50-க்கும் குறைவானர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications