192 பயணிகள்! மும்பை - சென்னை வந்த விமானம்! ஓடுபாதையில் வால்பகுதி உரசி தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு
சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு 192 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது வால் பகுதி ஓடுபாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வால் பகுதி உரசியது தொடர்பாக விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
நாட்டிலேயே மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருவதும் போவதும் என எப்போதுமே பரபரப்பாக கட்சியளிக்கும். இந்த சூழலில் நேற்று சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. ஏ 320 ரக விமானமான இந்த விமானத்தில், 192 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் வழக்கம் போல நேற்று தரையிறங்கும் போது அதன் வால்பகுதி ரன்வேயில் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி கிளம்பியிருக்கிறது. உடனே சுதாரித்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு மேற்கோண்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு சாதுர்யமாக விமானத்தை லேண்டிங் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மார்ச் 8 ஆம் தேதி இண்டிகோ ஏர்பஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையில் உரசியது. இதையடுத்து விமானத்தில் உரிய பழுது பார்ப்பு பணிகள் முடிந்து பறப்பதற்கான தகுதி சான்று பெறப்பட்டது. பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். உயர்தர பாதுகாப்புடன் நாங்கள் விமானங்களை இயக்கி வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இதே விமானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் தரையிறங்கும் போது வால் பகுதி உரசியது. அதன்பிற்கு விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் மீண்டும் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடந்த 18 மாதங்களில் 8 முறை இண்டிகோ விமானங்கள் வால் பகுதி உரசிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த தொடர் நிகழ்வுகள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications