இண்டிகோ விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! சென்னையில் அதிகாலை 3 மணி முதல் தொடங்கியது சேவை!
சென்னை: சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
டெல்லி உள்ளிட்ட விமனா நிலையங்களிலும் இண்டிகோ விமான சேவை குறைந்த விமானங்களுடன் நடந்து வருகிறது. நீண்ட இடையூறுக்குப் பிறகு இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு, பயணத்தை உறுதி செய்யுமாறும் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் இண்டிகோ விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு, விமானி மற்றும் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
சென்னையில் மூன்றாவது நாளாக இண்டிகோ விமானங்களின் சேவை நேற்று பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 62 விமானங்கள் ரத்தான நிலையில், 62 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை இண்டிகோ விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் தவித்தனர். விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து முறையான அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.
தலைநகர் டெல்லியில் இருந்து 225 இண்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோன்று, பெங்களூரில் 102 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், ஹைதராபாத்தில் 92 விமானங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
சென்னை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் இண்டிகோ சேவை நள்ளிரவு வரை முடங்கியது. ஏர் இந்தியா, ஸ்பை ஜெட் நிறுவன விமானங்கள் மட்டுமே இயங்கியதால், விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. சென்னை- கோவைக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தான நிலையில், பயணிகளிடம் இண்டிகோ நிறுவன சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் மன்னிப்பு கோரினார். நாள்தோறும் சுமார் 2,300 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. அதில் கிட்டத்தட்ட பாதி விமானங்களின் சேவைகள் கடந்த சில நாள்களாகவே முடங்கியுள்ளதால் இந்திய விமான போக்குவரத்து துறையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்று விளக்கம் அளித்தார்.
வரும் டிசம்பர் 10 முதல் 15 ஆம் தேதிக்குள் தங்கள் நிறுவனத்தின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் பயணிகளுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் அறிமுகப்படுத்திய FDTL எனப்படும் விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளே முக்கிய காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாய ஓய்வு என்ற விதிமுறையை மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications