நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவரும் செய்யாத ஒரு பிரம்மாண்டமான சாதனையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த நபர் என்ற பெருமை இனி மோடிக்கே சொந்தமாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர், அதிக நாட்கள் தொடர்ந்து பதவியில் நீடித்த அசைக்க முடியாத சாதனையை படைத்திருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி இப்போது அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமராக 1952ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி ஜவஹர்லால் நேரு முறைப்படி பதவியேற்றார். அன்று முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ம் தேதி அவர் மரணமடையும் வரை, இந்தியாவின் பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பதவி வகித்து ஒரு பெரிய சாதனையை படைத்து வைத்திருந்தார். கடந்த 62 ஆண்டுகாலமாக இந்த சாதனையை யாராலும் நெருங்கக்கூட முடியவில்லை.

PM Modi India Prime Minister Record Longest Serving PM India Political Record Breaking Indian Politics History

ஆனால், கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி இந்தியாவின் பிரதமராக முதன்முறையாக மோடி பதவியேற்றார். அன்று முதல் மக்களின் பேராதரவோடு தொடர்ந்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராக தற்போதும் அவர் நீடித்து வருகிறார். இந்த நீண்ட பயணத்தில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதியன்று, முன்னாள் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 4,077 நாட்கள் பதவிக்கால சாதனையை பிரதமர் மோடி வெற்றிகரமாக முறியடித்தார்.

"நேற்று இந்திரா... நாளை நேரு..."

அப்போது அரசியல் வட்டாரங்களில், "நேற்று இந்திரா... நாளை நேரு..." என்று பேசப்பட்டது. அதாவது, இந்திரா காந்தியின் சாதனை முறியடிக்கப்பட்ட உடனே, அடுத்த இலக்கு நேருவின் சாதனைதான் என்பது அனைவருக்குமே தெரிந்தது. அதன்படியே, இந்திரா காந்தியின் சாதனை முறியடிக்கப்பட்டு சரியாக ஓராண்டு காலத்திற்குள், தற்போது இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 4,398 நாட்கள் சாதனையும் தகர்க்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசியல் கணக்குகளின்படி, பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் சாதனையை சமன் செய்து, அதற்கு அடுத்த நாளான ஜூன் 10ம் தேதியுடன் 4,399 நாட்களை எட்டிவிட்டார். இதன் மூலம், சுதந்திர இந்தியாவின் மிக நீண்ட காலம் நாட்டை வழிநடத்திய பிரதமர் என்ற அதிகாரப்பூர்வ பெருமையை மோடி பெற்றுள்ளார்.

இடைத்தரகர்கள் இல்லை

மோடியின் இந்த சாதனை என்பது வெறும் பதவிக்கால நீட்டிப்பு மட்டுமல்ல, இது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியாகும். சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் காலத்தில் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய நிர்வாக முறை, பிரதமர் மோடியின் கடந்த 10 வருட ஆட்சியில் முற்றிலும் மாறி, முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய அரசு முறைகள், அதனால் ஏற்பட்ட காலதாமதமும், லஞ்சமும் இன்றைய தொழில்நுட்ப நிர்வாகத்தால் டோட்டலாக ஒழிக்கப்பட்டுள்ளன. புரோக்கர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு மாற்றியிருக்கிறது.

டிஜிட்டல் சேவை, ஜன் தன் கணக்கு

இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது டிஜிட்டல் அதிகாரமும், வங்கிச் சேவைகளும்தான். அதுமட்டுமல்ல, கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள், இலவச கேஸ் சிலிண்டர், குழாய் வழி குடிநீர் போன்ற அடித்தட்டு மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றி, அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்பதே இந்த வரலாற்று பயணத்தின் நோக்கமாகும்.

பாம்பு பிடிப்பவர்களின் தேசம்

ஒரு காலத்தில் இந்தியாவை "பாம்பு பிடிப்பவர்களின் தேசம்" என்று கேலி செய்த வெளிநாட்டவர்கள், இன்று இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு வியக்க துவங்கி உள்ளார்கள்.

ஆக மொத்தம், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நேருவின் சாதனைகளை முறியடித்துள்ள பிரதமர் மோடியின் இந்த பயணம், இந்தியாவின் அரசியல் உலகளாவிய பொருளாதார வல்லமையை பறைசாற்றும் ஒரு வரலாற்று சகாப்தம் என்றே சொல்லலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+