சென்னை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய.. இந்தோனேசிய ராணுவ விமானம்! பரபரப்பு!
சென்னை: சென்னையில் இந்தோனேசியா நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கியிருக்கிறது. முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ராணுவ விமானம் தரையிறங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்.35 போர் விமானம் திடீரென தரையிறங்கியிருந்து. அந்நிய நாட்டின் போர் விமானம் திடீரென தரையிறங்கியதால், மொத்த நாடும் உட்சபட்ச அலர்ட் மோடுக்கு சென்றது. பின்னர் விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் இந்தோனேசிய ராணுவத்திற்கு சொந்தமான ஹெர்குலஸ் சி-130 ரக போர் விமானம் தரை இறங்கியிருக்கிறது. ஆனால் விமானிகளின் ஓய்வுக்காக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
சென்னையில் தரையிறங்கிய ஹெர்குலஸ், போர் விமானமாக இருந்தாலும் பெரும்பாலும் ஆயுதங்கள் உள்ளிட்ட சரக்குகளை கையாளவே பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் தென் அரைக்கோளம் பகுதியில் தற்போது 'பிட்ச் பிளாக்' கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, புரூணை, கனடா, ஃபிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 4,435 பேர், 140 விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த விமானங்கள் வானில் எரிபொருளை நிரப்புவது, போர் விமானங்களை கூட்டு பயிற்சி செய்து பார்ப்பது, 20 நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு கலந்தாலோசனைகளை மேற்கொள்வது இவற்றை உள்ளடக்கியதுதான் 'பிட்ச் பிளாக்' கூட்டுப் பயிற்சி ஆகும். தென் அரைக்கோள பகுதி எனில், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கமான பகுதியாகும். எனவே பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும்போது ஓய்வு பெற சென்னையில் இந்தோனேசியா விமானம் தரையிறங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications