அடையாளம் பிட்டு கூட தெரிய கூடாது...ரெட்டிக்கு ரெட்கார்டு போட்ட மாஜி மணல் மாஃபியா சேகர் ரெட்டி
சென்னை: தமது சுய அடையாளம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தமது பெயரின் பின்னால் வரக் கூடிய ரெட்டி என்பதை ஆதார் முதல் அத்தனை ஆவணங்களிலும் கட் செய்துவிட்டாராம் மாஜி மணல் மாஃபியா சேகர் ரெட்டி எனும் ஏ.ஜெ.சேகர்.
சேகர் ரெட்டி... அதிமுக ஆட்சிக் காலத்தில் மணல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக இருந்தவர்.
2016-ல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். மேலும் புதிய ரூ2,000 நோட்டுகள் அச்சிடப்படும் என அறிவித்தார்.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் ஒட்டு மொத்த தேசமும் அல்லோகலப்பட்டது. வங்கிகள், ஏடிஎம்களில் பல மணி நேரம், நாட்கள் கணக்கில் காத்து கிடக்க வேண்டியது. ஒட்டுமொத்த நாடும் இயல்பு வாழ்க்கையை தொலைத்தது. இந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்களாகிப் போயின.

மலைக்க வைத்த பணக்கட்டுகள்
அப்போது தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அத்தனை மக்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அதுவரை அரிதான ஒன்றாகப் பார்க்கப்பட்ட ரூ2,000 நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. மொத்தம் ரூ9.63 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள். மேலும் 96.89 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளும் சேகர் ரெட்டியிடம் சிக்கின. செல்லாது நோட்டுகள் என்று பேசத் தொடங்கினாலே சேகர் ரெட்டிதான் நினைவுக்கு வருகிற அளவுக்கு மக்கள் மனதில் ஆழப் பதிந்து போய்விட்டது.

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய வழக்கில் சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையானார் சேகர் ரெட்டி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சேகர் ரெட்டி சந்தித்தார். ஆனால் சேகர் ரெட்டி என்ற பெயரில் இல்லாமல் தொழிலதிபர் சேகர் என்ற பெயருடன் சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் மணல் விவகாரம் சேகர் ரெட்டி கைக்குப் போகப் போகிறது என்கிற பேச்சு எழுந்தது. ஆனால் சேகர் ரெட்டியோ இனி மணல் தொழிலிலேயே ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார்.

ரெட்டியை கட் செய்த சேகர்
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக மீண்டும் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். ஆனால் அதிலும் சேகர் ரெட்டி எனக் குறிப்பிடாமல் சேகர் என்றே அந்த அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சேகர் ரெட்டி என்றாலே மணல் மாஃபியா, புதிய ரூபாய் நோட்டுகள் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறது. அதனால் இனி ரெட்டி என்ற பெயரே போடக் கூடாது என ஆதார் முதல் அத்தனை அரசு ஆவணங்களிலும் ரெட்டியை கட் செய்துவிட்டாராம். அவரது ஆதார் அடையாள அட்டையிலும் ஏ.ஜே. சேகர் என்றுதான் மாற்றப்பட்டுள்ளதாம். அந்த பழைய அடையாளம் துளிகூட வரக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறாராம் சேகர் ரெட்டி சாரி ஏ.ஜே.சேகர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications