இதுதான் இந்தியா.. பொது இடத்தில் ஐபோனை விட்டுச்சென்ற வெளிநாட்டு இளைஞர்.. ஒருத்தரும் தொடவே இல்ல! சபாஷ்
சென்னை: இந்தியாவுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். அந்த நபர் புத்தம்புது ஐபோனை பொது இடம் ஒன்றில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த செல்போன் அங்கேயே இருந்துள்ளது. ஆனாலும், யாருமே அந்த செல்போனை தொடக்கூட இல்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, பல மொழி கலாச்சாரம் ஆகியவற்றை நேரில் பார்க்கப் பலரும் இங்கு வருகிறார்கள். இங்குள்ள பல்வேறு விஷயங்களையும் பார்த்து வியந்து போகிறார்கள். இணையத்திலும் அந்த பிரமிப்பைப் பகிர்கிறார்கள்.

கேரளா
அப்படி நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு வந்திருந்த ஒருவர், அங்குச் சுற்றிப் பார்த்திருக்கிறார். கேரளாவில் அழகை வியந்து பார்த்த அவர் இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பல்வேறு போஸ்ட்களை பகிர்ந்திருக்கிறார். இதற்கிடையே அவர் அங்கு இன்னொரு விஷயத்தையும் செய்திருக்கிறார். அதுவே இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது பொதுவாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பானவை எனச் சொல்வார்கள். அங்கு ஐபோன் அல்லது லேப்டாப்பை பொது இடத்தில் வைத்துவிட்டுச் செல்வார்கள். பல மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து பார்த்தாலும் கூட அந்தப் பொருள் அப்படியே இருக்கும். இதைத்தான் அந்த நபர் கேரளாவில் செய்து பார்த்திருக்கிறார். இந்த வீடியோவின் முடிவுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பிரபலம்
யூனெஸ் சரூன் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலமே இதைச் செய்திருக்கிறார். அவர் மாலை 4:30 மணியளவில் தனது ஐபோனை பொது இடத்தில் அப்படியே வைத்துவிட்டுப் போய்விட்டார். சுமார் 2 மணி நேரம் அந்த செல்போன் அங்கேயே இருக்கிறது. பலரும் அந்த போனை தாண்டிச் செல்கிறார்கள். சிலர் அந்த மொபைல் அருகே வருகிறார்கள். அதைப் பார்க்கிறார்கள். இருப்பினும் யாரும் அதை எடுக்கவில்லை. இது கேரள மக்களின் பண்பைக் காட்டுவதாக இருக்கிறது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட யூனெஸ் சரூன், "இந்தியா எவ்வளவு பாதுகாப்பானது? இடம்: கேரளா" என்று தலைப்பில் போஸ்ட் செய்திருக்கிறார். இந்த வீடியோ இதுவரை சுமார் 4 கோடி வியூஸ்களை கடந்து டிரெண்டாகி வருகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து
மேலும், இந்த வீடியோவுக்கு கீழ் பல்வேறு கமெண்டுகளை பார்க்க முடிகிறது. ஒரு தரப்பு பயனர்கள் இந்திய மக்களைப் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் ஒரு நெட்டிசன், "நீங்கள் இந்தியாவின் தப்பான பக்கத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்திற்கும் வந்து பாருங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்டிற்கு சுமார் 82,000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இன்னொரு நபர் சிலர் "என் ஊருக்கு வாருங்கள், 10 வினாடிகளில் மொபைல் காணாமல் போய்விடும்" என்று பதிவிட்டிருந்தார்..
யூடியூப் டிரெண்டிங்
இணையத்தில் இதுபோல பல வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் யூடியூபர்கள் அங்கு இதுபோல மதிப்புமிக்க பொருளை பொது இடத்தில் நீண்ட நேரம் விட்டுச் சென்றுவிடுவார்கள். அதை மறைந்திருந்து வீடியோவும் எடுப்பார்கள். திரும்ப வந்த பார்க்கும்போது அந்தப் பொருள் இருக்கிறதா இல்லையா என்பதே மேட்டர்.. அதைத் தான் இந்த நபர் இப்போது இந்தியாவில் செய்திருக்கிறார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications