இந்தாங்க பிடிங்க.. ஓட்டு போடுங்க.. 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கும் பாஜக வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருபது ரூபாய் பத்திரத்தாளில் உறுதிமொழிகளை எழுதிக்கொடுத்து வீடு வீடாக மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் பாஜக வேட்பாளர்.

Recommended Video

    இந்தாங்க பிடிங்க.. ஓட்டு போடுங்க.. 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கும் பாஜக வேட்பாளர்

    தன் மீது குற்றச்சாட்டு எழுந்தால் தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் கூறி வருகிறார்.

    வேட்பாளர்களின் நூதன் பிரச்சாரங்களால் தேர்தல் களம் விறு விறுப்படைந்துள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி

    நகர்ப்புற உள்ளாட்சி

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி காலை தொடங்கி அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புது வண்ணாரப்பேட்டை

    புது வண்ணாரப்பேட்டை

    அந்த வகையில் சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 39 வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் சோபனா என்பவர் வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றார். 20 ரூபாய் பத்திரப் பேப்பரில் உறுதிமொழிகளை அச்சடித்து புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கொடுத்து வாக்குகளை சேகரிக்கிறார்.

    பாஜக வேட்பாளர்

    பாஜக வேட்பாளர்

    அதில் அப்பகுதியில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை தான் வெற்றி பெற்றால் செய்து தருவதாகவும் குடிநீர் பிரச்சனை சுகாதார சீர்கேடு முறையான மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். மேலும், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுவேன் என்றும் வீடு வீடாக உறுதிமொழி கொடுத்து வருகிறார்.

    நூதன பிரச்சாரம்

    நூதன பிரச்சாரம்

    தன் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் பாஜக வேட்பாளர் எழுதிக் கொடுத்திருக்கிறார். தேர்தலுக்கு முன்பே ராஜினாமா குறித்தும் பேசி வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் சோபனாவின் நூதன பிரச்சாரம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+