சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹேய்.. அதுக்குன்னு இப்படியா.. ஓடும் ரயிலில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. மிரண்டு போன பயணிகள்..!!

Google Oneindia Tamil News

சென்னை: சீனப்பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.. என்ன காரணம்?

முதன்முதலில், கொரோனாவைரஸ் பரவல் சீனாவின் மீன் மார்க்கெட்டில் இருந்து ஆரம்பித்தாலும், அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததிலும் சீனாவே முதன்மையாக இருந்தது.

தொற்றில் இருந்து விடுவித்து கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரமாகவே வந்துவிட்டது.. அதனால்தான், 2வது அலைகூட, சீனாவில் அப்போது ஏற்படவில்லை.

நேரலையில் செய்தி வழங்கிய ரிப்போர்ட்டரிடம் 'இயர்போனை ஆட்டைய போட்ட கிளி'.. பரவும் வீடியோ! நேரலையில் செய்தி வழங்கிய ரிப்போர்ட்டரிடம் 'இயர்போனை ஆட்டைய போட்ட கிளி'.. பரவும் வீடியோ!

தொற்று

தொற்று

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட சராசரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ள நிலையில், இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் 2,62,966 ஆக அதிகரித்துள்ளது..

 ஷேர் - சப்வே

ஷேர் - சப்வே

இதனால், கொரோனாவைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என்று அந்நாட்டு மக்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. சீனாவின் ஹுபேய் மாகாணத்தில், சுரங்கப்பாதை ரயிலில், ஒரு பெண் சென்று கொண்டிருக்கிறார்.. அவருடன் ஏராளமானோரும் அதே கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கிறார்கள்..

 பிளாஸ்டிக் கவர்

பிளாஸ்டிக் கவர்

இந்த பெண்ணுக்கு பக்கத்திலேயே பயணிகள் மாஸ்க் அணிந்து உட்கார்ந்துள்ளனர்.. ஆனால், இவர் மட்டும் ஒரு பிளாஸ்டிக் பையால், தன் உடம்பெல்லாம் மூடிக் கொண்டு, ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்.. தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவே, இப்படி முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார்... அங்கிருந்த சக பயணிகள் எல்லாம் இதை வினோதமாக பார்த்தனர்..

 வாழைப்பழம்

வாழைப்பழம்

ஆனால், அந்த பெண் எதைபற்றியும் கவலைப்படாமல், முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிட்டு முடிக்கிறார்.. இதை சக பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடவும், பலரும் இதை ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இப்படி சாப்பிட்டால் மட்டும் தொற்று இல்லாமல் போய்விடுமா? அப்படி பார்த்தால் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதே ஆபத்தானதுதானே? என்று சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

English summary
Innovative video and the girl who ate a strange banana on the train
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X