ஈசிஆர் வீடியோ.. சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: அண்ணாமலை
சென்னை: சென்னை ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்கள் இரவு நேரத்தில் சென்று கொண்டிருக்கும்போது அந்த காரை இடைமறித்து நிறுத்தி அவர்களிடம் இளைஞர்கள் அத்துமீறும் வகையில் நடந்துகொள்ளும் வீடியோ பல டிவி சேனல்களில் வெளியாகியுள்ளது. அதிமுக ஐடிகள் மூலமாக இணையத்திலும் பரவி வருகிறது.

காரில் இருக்கும் பெண்கள் பதற்றத்துடன் பேசும் வகையில் இந்த வீடியோவானது இருந்தது. அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? எப்போது இந்த சம்பவம் நடந்தது?, காரில் துரத்திய இளைஞர்கள் யார் என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கூறியதாவது:- நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள். நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத் தான் இருக்கிறது.
சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. காலை, அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.
நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக அவர் கூறினார். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கும் பிரச்சினை.
இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். தமிழக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு பட்ரோல் வண்டி வாங்கி கொடுங்க. டூவிலர் வாங்கிக்கொடுங்க.
காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல் கையாளாகாத தமிழக திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications