ஆபரேசன் ப்ரூட்டஸ்.. ஜிகே மணியை ஓரம் கட்டும் பாட்டாளிகள்.. ‘அந்த’ கட்சிக்கு தாவப் போறாராமே! பரபர பாமக
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் தேர்தல் களம் தற்போதே சூடாகி வருகிறது. பிரதான கட்சிகளான அதிமுக திமுக இடையே மோதல் வலுத்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் ஜிகே மணியை ஓரம் கட்டுவதற்கான வேலைகள் தீவிரமடைந்து இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஜிகே மணியை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக திமுக ஆகிய தமிழகத்தின் இரு கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை துவக்கி இருக்கின்றன. திமுகவை பொருத்தவரை அந்த கட்சியுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் சில கட்சிகள் இருக்கின்றன. புதிதாக அந்த கூட்டணிக்கு கட்சிகள் வர வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்ற பேச்சு வார்த்தை இன்னும் சில மாதங்களில் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது..
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது. அந்த கட்சியில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் கட்சி விவகாரங்களை சீர் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் திமுகவில் அதிரடி மாற்றமாக பல மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் தூக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றனர். அமைச்சரவை மாற்றமும் அரங்கேறி இருக்கிறது. அதிமுகவிலும் இதுபோன்ற அதிரடி நிகழ்வுகள் இருக்கும் என்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பாட்டாளி மக்கள் கட்சியிலும் தலைமை தொடர்பாக மோதல் வெடித்த நிலையில் தற்போது அது அடங்கி இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என கட்சியினர் கூறி வருகின்றனர். நிறுவனர் ராமதாஸும் அதற்கு உடன்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இடையில் தலையை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் ஜிகே மணி. தனது பாமக தலைவர் பதவி பறிபோனதற்கும், தனது மகனின் இளைஞரணி தலைவர் பதவி பறிபோனதற்கும் அன்புமணி தான் காரணம் என அவருக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதும் சீனியர் என்ற முறையில் அனைத்து தேர்தல்களிலும் ஜிகே மணிக்கு வாய்ப்பளித்தவர் அன்புமணி ராமதாஸ் தான் என்கின்றனர் கட்சியினர். ராமதாஸின் வயது மற்றும் மனநிலையை வைத்து அன்புமணிக்கு எதிராகவே ஜிகே மணி காய் நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான் கட்சி நிகழ்ச்சிகளில் அன்புமணியை ராமதாஸ் எதிர்த்து பேச காரணம் என்கின்றனர்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலைஞரை புகழ்ந்து பேசினார் ஜிகே மணி. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சமூக ஊடக பேரவை நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர்களும் மாவட்ட தலைவர்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். தேர்தல் வரும் நேரத்தில் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாம் என்பது தான் அன்புமணி விருப்பம். மேலும் தற்போது வன்னியர் சங்க மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லலாம் என அவர் நினைக்கிறாராம்.
ஆனால் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மூத்த நிர்வாகிகளும் ஜிகே மணி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்களாம். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜிகே மணி உடன் யாரும் பேசுவது கிடையாது, மாவட்ட செயலாளர்களும் அவரது தொடர்பை துண்டித்து விட்டார்களாம். கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த ஜிகே மணி கடும் அதிருப்தியில் இருக்கிறார். விரைவில் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிடலாம் என்று மனநிலைக்கே வந்துவிட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இன்னும் சில தினங்களில் அணி மாறும் படலங்கள் நடக்கலாம் என்கின்றனர். அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தான் முக்கியம் என்பதால் ஜிகே மணியின் பிளவெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications