மக்கள் பாதிக்க கூடாது.. நாளை நடக்கும் பஸ் ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்.. ஐஎன்டியூசி அறிவிப்பு
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யூசி அறிவித்துள்ளது. மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி செளந்தரராஜன் கூறினார்.

போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 25 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை தோல்வி என்று அறிவித்த உடனேயே ஆர்ப்பாட்டங்களிலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபட தொடங்கினர் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். இதனிடையே, பயணிகளுக்கு பாதுகாப்பு எதுவும் இன்றி பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆளும் கட்சியின் தொமுச பங்கேற்கவில்லை. இதனிடையே, வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யூசி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுகிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளுக்கு சிரமம் இன்றி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications