இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அசத்தல்! ஐஓபி தரும் யுபிஐ பரிவர்த்தனை சேவை! பட்டன் போனிலும் பணம் அனுப்புலாம்
சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களின் நலனையும், அக்கறையையும் கருத்தில் கொண்டு எண்ணற்ற அதிரடிகளை செய்து வருகிறது.. அந்தவகையில், பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.. இது ஐஓபி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை தந்து ஏற்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது அதிகரித்தபடியே உள்ளது.. ஆரம்பத்தில் கையில் பணம் வைத்தே அனைவரும் செலவழித்து வந்த நிலையில், இன்று அனைத்திற்கும் டிஜிட்டல் பரிவர்த்தனையை நாடும் சூழல் வந்துவிட்டது.. இது பணப்பரிவர்த்தனையை பொதுமக்களுக்கு எளிமையாக்குகிறது.

யுபிஐ பின் நம்பர்
எனினும், சைபர் மோசடிகள் பெருக்கடுக்க துவங்கிவிட்டன.. அதிலும் யுபிஐ பயன்படுத்துபவர்களே மோசடி செய்பவர்களின் முதல் டார்கெட்டாக உள்ளனர். எனவே இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருப்பது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
குறிப்பாக, நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்பும்போது, UPI ஐடியை குறைந்தபட்சம் 2 முறையாவது சரிபார்க்க வேண்டும்... அதேபோல உங்கள் UPI PIN நம்பரை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.. வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது உங்களது UPI PIN நம்பரை கேட்டாலும் அவர்களிடம் சொல்லவோ, பகிரவோ கூடாது.. முக்கியமாக உங்கள் UPI PIN நம்பரை அடிக்கடி மாற்றிக் கொள்வது நல்லது என்கிறார்கள்.
பட்டன் போன்
இப்போதைக்கு நம்முடைய நாட்டில் சமீபத்திய தரவுகளின்படி, 50 கோடி பேர் யுபிஐ பயன்படுத்துகிறார்களாம்.. எனினும், பட்டன் போன் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதை அணுகுவது இன்னும் சிரமமாகவே உள்ளது.
அந்தவகையில், சுமார் 8 5 கோடி பேர் யுபிஐ பயன்படுத்தாமல் உள்ளதால், இவர்களையும் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்புக்குள் கொண்டு வரவே, ரிசர்வ் வங்கியும், என்பிசிஐ எனப்படும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகமும் இணைந்து , யுபிஐ 123 பே என்ற சேவையை கடந்த 2022-ல் கொண்டுவந்தது. இந்த சேவையை பயன்படுத்த நெட்வசதி தேவையில்லை.
வாய்ஸ் பேடு
இப்படிப்பட்ட சூழலில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை அறிமுகப்படுத்த போகிறதாம். அதாவது குரல் அடிப்படையிலான யுபிஐ பரிவர்த்தனை சேவையை விரைவில் அறிமுகப்படுத்த போகிறதாம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
இதற்காகவே நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. என்பிஎஸ்டி என்ற இந்த நிறுவனம் மிஸ்கால்பே என்ற டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தவும் இணையதள இணைப்பு தேவையில்லை.. மேலும், ஆஃப்லைன் பரிவர்த்தனை என்பதால் மோசடிக்கான வாய்ப்புகளும் மிகக்குறைவு
பட்டன் போனில் எப்படி செயல்படும்?
இந்த வசதியை பெற விரும்புவோர், வங்கி வழங்கும் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும்.. பிறகு, உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வரும், அப்போது பரிவர்த்தனை மதிப்பையும், யுபிஐ பின் நம்பரையும் பதிவிட வேண்டும்.. அதாவது குரல் அடிப்படையிலோ, மொபைல் கீபேட் வாயிலாகவோ பதிவிடலாம்.. இந்த சேவை, 12 இந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது..
ஆக, இந்தியாவில் பட்டன் போன் வைத்திருப்பவர்களும் இனிமேல் யுபிஐ-யில் இணைந்து பரிவரித்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications