வட இந்தியாவில் இருந்து.. சென்னை வந்த லாரியை மடக்கிய கும்பல்..! ரூ.11 கோடி ஐபோன்கள் திருட்டு
சென்னை: அரியானா மாநிலம் குருகிராமில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த லாரியை வழிமறித்து அதிலிருந்த ரூ. 11 கோடி மதிப்புள்ள ஐபோன்களை கொள்ளை கும்பல் சினிமா பாணியில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானா மாநிலம் குருகிராமில் இருந்து சென்னைக்கு ஐபோன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் பல கோடி மதிப்புள்ள ஐபோன்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாரி மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகே வந்துகொண்டிருந்தபோது ஒரு கொள்ளை கும்பல் லாரியை வழிமறித்தது.

தொடர்ந்து லாரியில் இருந்த டிரைவரை மிரட்டி போதைப்பொருளை கொடுத்துள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்ததும், கண்டெய்னர் லாரியில் இருந்த சுமார் 1500 செல்போன்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் ஆகும். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் பண்டாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணை மந்தமாக நடந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீஸ்காரர்கள் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று புகார் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து பணியில் அலட்சியமாக பண்டாரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாக்சந்த் மற்றும் உதவி சப் - இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் ஒருவர் என 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH | Madhya Pradesh: iPhones worth Rs 12 crore stolen from a truck in Sagar
— ANI (@ANI) September 1, 2024
Pramod Verma, Inspector-General of Police of Sagar Zone says, "We received info that 1,600 iPhones worth Rs 12 crore getting looted...The guard is said to be the accused...Teams have been formed and… pic.twitter.com/qFhU4nP1gR
ஆகஸ்ட் 15 ஆம் தேதியே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே புகார் அளிக்கபட்ட நிலையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகே உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.. ஐபோன்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் டிரைவருடன் ஒரு பாதுகாவலர் இருந்துள்ளார்.
அப்போது நடுவழியில் தனது நண்பர் என்றும் மற்றொருவரை லாரியில் பாதுகாவலர் ஏற்றியதாகவும் அதன்பிறகே லாரி டிரைவரை கட்டிப்போட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியிருப்பதாக விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. கொள்ளை நடந்த உடனேயே கண்டெய்னர் லாரியின் டிரைவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்க சென்றுள்ளார்.
ஆனால், போலீசார் அலட்சியம் காட்டியதாகவும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து அவர்கள் உத்தரவிட்ட பிறகே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தான் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications