கேமரா முதற்கொண்டு எல்லாம் சதி செய்ய.. மேட்சில் "ட்விஸ்ட்" நடந்த அந்த நொடி.. சிஎஸ்கே வென்றது எப்படி?
சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக மிகவும் திரில்லாக சென்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று ஐபிஎல்லில் சாம்பியன் ஆகியுள்ளது.
கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் சீசனில் 4வது முறையாக சாம்பியன் மகுடத்தை சிஎஸ்கே சூடி உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சிஎஸ்கே பவுலிங்கில் சிறப்பான கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றுள்ளது. இதில் தொடக்கத்தில் ஆட்டம் கொஞ்சம் கொல்கத்தாவிற்கு சாதகமாக இருந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 20 ஓவரில் 192 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே
இதில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே அதிரடியாக ஆடியது . எப்படியாவது அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று திட்டத்தோடுதான் சிஎஸ்கே வீரர்கள் ஆட்டத்தை தொடங்கினார்கள். முதலில் பெரும்பாலும் மெதுவாக ஆடி வேகம் எடுக்கும் ருத்துராஜ் கூட தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். வெறும் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன்பின் அதிரடி காட்டிய டு பிளசிஸ் வேகம் எடுத்தார்.

ருத்துராஜ்
ருத்துராஜ் சென்றால் மட்டும் மேட்ச் ஸ்லோ ஆகிவிட கூடாது என்று உறுதியாக நின்ற டு பிளசிஸ் சிக்ஸ், பவுண்டரி என்று வேகம் காட்டினார். இன்னொரு பக்கம் சின்ன கேமியோ என்றாலும் சிறப்பான கேமியோ கொடுத்த உத்தப்பாவும் அதிரடியாக ஆடினார். வெறும் 15 பந்தில் 3 சிக்ஸ் அடித்து உத்தப்பா 31 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய மொயின் அலி முதல் 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

பவுண்டரி
ஆனால் அதன்பின் அவரும் சிக்ஸ் பவுண்டரி என்று வேகம் காட்டினார். வெறும் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி அடக்கம். இன்னொரு பக்கம் கடைசி பந்தை அதிரடி காட்டிய டு பிளசிஸ் 59 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 86 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே 192 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொல்கத்தாவிற்கு நிர்ணயம் செய்தது.

கொல்கத்தா
ஆனால் கொல்கத்தா 2012லேயே இந்த ஸ்கோரை பைனலில் சென்னையில் சேஸ் செய்து சிஎஸ்கேவை வீழ்த்தி உள்ளது. இந்த முறையும் 192 ரன்கள் எடுத்ததால் வரலாற்று கொல்கத்தாவிற்கு சாதகமாக இருந்தது. அதோடு பேட்டிங் பிட்ச், ட்யூ என்று பல காரணங்கள் சிஎஸ்கேவிற்கு எதிராக இருந்தது. மிக முக்கியமாக எல்லாமே 2012 ஐபிஎல் சீசனில் நடந்தது போலவே சென்றது.

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர் 0 ரன்களில் கொடுத்த கேட்சையும் தோனி மிஸ் செய்தார். அதோடு கில் கொடுத்த கேட்சை ராயுடு பிடிக்க அது கேமரா வயரில் பட்டதால் டெட் பால் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி எல்லாமே சிஎஸ்கேவிற்கு எதிராக சென்றது. இதனால் சிஎஸ்கேவிற்கு ராசி இல்லையோ என்றே கருதப்பட்டது. ஆனால் அதன்பின்தான் ஆட்டம் மாறியது.

தோனி கேட்ச்
10 ஓவர்கள் வரை விக்கெட்டே செல்லவில்லை. 11வது ஓவரில்தான் 4வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் தாக்கூர் ஓவரில் அவுட் ஆனார். அந்த ஓவரில்தான் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. லார்ட் ஷரத்துல் தாக்கூர் என்ற பெயருக்கு ஏற்றபடி சிஎஸ்கேவிற்கு மீண்டும் லார்ட் போல வந்து தாக்கூர்தான் உதவினார். அதே ஓவரில் மீண்டும் நிதிஷ் ராணா விக்கெட்டை எடுத்தார் தாக்கூர். பின் அடுத்த ஓவரிலே ஹஸல்வுட் பவுலிங்கில் சுனில் நரேன் அவுட்டானார்.

மூன்று விக்கெட்
வரிசையாக இப்படி மூன்று விக்கெட்டுகள் விழுந்தது கொல்கத்தாவை திணற வைத்தது. பின்னர் 14வது ஓவரில் மீண்டும் சாகர் பந்தில் அரை சதம் அடைத்திருந்த கில்லும் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தொடங்கினாலும் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இன்னொரு பக்கம் இயான் மோர்கனும் தடவிக்கொண்டு இருந்தார்.

விக்கெட்
பின்னர் அதே ஓவரில் மீண்டும் ஜடேஜா ஹசன் விக்கெட்டையும் எடுத்தார். இதனால் வரிசையாக கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் மார்கன் அப்படியே நிற்க இன்னொரு பக்கம் காலில் காயத்தோடு வந்த ராகுல் திரிப்பாதியும் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வெறும் 4 ரன்கள் எடுத்த மோர்கனும் அவுட்டானார். இதனால் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா சிஎஸ்கேவிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் சிஎஸ்கே கொல்கத்தாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் ஆனது!
-
தோனி ஒரு வீரருக்காக காத்திருக்கிறார்.. சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகள் நீடிக்க அதுவே காரணம்! -
சிஎஸ்கே கேப்டனாகும் சஞ்சு சாம்சன்.. அந்த சம்பவம் மட்டும் நடந்தால்! ருதுராஜ் எச்சரிக்கையா இருக்கணும் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications