பட்டவர்த்தனமாக தெரிந்த வீக்னஸ்.. சிஎஸ்கே இதை மட்டும் செய்தால் போதும்.. தோனிக்கு காத்திருக்கும் சவால்
சென்னை: டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தாலும் கூட அந்த அணியின் பலவீனம் கடந்த போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.
2021 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்க உள்ளது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
2012ல் கொல்கத்தாவிடம் பைனலில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளை நடக்கும் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

டெல்லி
நேற்று டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த சீஸனின் இரண்டாம் பாதி முழுக்கவே கொல்கத்தாதான் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

கம்பேக்
மிகப்பெரிய கம்பேக்கை இந்த சீசனில் கொல்கத்தா அணி கொடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக கொல்கத்தா சவாலாக இருக்கும். டெல்லிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் நன்றாக ஆடி கொல்கத்தா எளிதாக வென்றது. ஆனால் நேற்று கொல்கத்தா அணி வென்றாலும் கூட அந்த அணியின் வீக்னஸ் வெளிப்படையாக தெரிந்தது.
Recommended Video

கொல்கத்தா
கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் வீரர்களை தவிர வேறு யாருமே இந்த சீசன் முழுக்க பெரிதாக ஆடவில்லை. வெங்கடேஷ் ஐயர், கில், ராகுல் திருப்பாதி, ராணா இவர்கள் நான்கு பேர் மட்டுமே கொஞ்சம் நன்றாக ஆடுகிறார்கள். ராகுலும் கூட ஸ்லோ இன்னிங்ஸ்தான் ஆடுகிறார். நரேன் எப்போதாவதுதான் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர். இதனால் டாப் ஆர்டரில் உள்ள வெங்கடேஷ் ஐயர், கில், ராணா மூன்று பேரை காலி செய்தால் போதும் சிஎஸ்கே வென்றுவிடும்.

சிஎஸ்கே
நேற்று கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் வீக்னஸ் பட்டவர்த்தனமாக அப்படியே வெளியே தெரிந்தது. இயான் மோர்கன் இந்த சீசன் முழுக்கவே அடிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் இரண்டாம் பாதியில் பார்மில் இல்லை. ரசல் இன்னும் மீண்டும் வரவில்லை. ஷாகிப் ஹசன் பேட்டிங்கில் பார்மில் இல்லை. இதனால் டாப் ஆர்டரை காலி செய்தாலே சிஎஸ்கேவிற்கு வெற்றி எளிதாகிவிடும்.

ஸ்பின்
கொல்கத்தாவின் ஸ்பின் படையை எதிர்கொள்ள சிஎஸ்கேவிற்கு சொல்லித்தர வேண்டியது கிடையாது. கடந்த போட்டியிலேயே இறங்கி வந்து ஸ்பின் பவுலிங்கை ஆடி சிஎஸ்கே பேட்டிங் படை கொல்கத்தா ஸ்பின் பவுலிங்கை காலி செய்தனர். ரூத்துராஜ், ரெய்னா, உத்தப்பா, டு பிளசிஸ், ராயுடு என்று வரிசையாக டாப் வீரர்கள் எல்லோரும் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆட கூடியவர்கள். கடந்த இரண்டு லீக் ஆட்டத்திலும் கொல்கத்தா சிஎஸ்கே வீழ்த்த இதுதான் காரணம்.

வெற்றி
இதனால் சிஎஸ்கே பேட்டிங் டெல்லி போல கொல்கத்தாவிடம் சுருண்டுவிடாது. ஆனால் தோனிக்கு இருக்கும் சவால் என்றால், அவர் தனிப்பட்ட வகையில் ஸ்பின் பவுலிங்கில் சரியாக ஆட வேண்டும். வரிசையாக வருணிடம் தோனி அவுட்டாகி வருகிறார். கொல்கத்தாவிடம் வருண், ஷாகிப், நரேன் என்று சிறப்பான ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். இவர்களை தோனி எப்படியாவது எதிர்கொள்ள வேண்டும். எல்லாம் கூடி வந்தால் சிஎஸ்கே கண்டிப்பாக கொல்கத்தாவை வீழ்த்த அதிக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications