சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஎஸ்கே மேட்சில் நடந்த அந்த சம்பவம்! உலகின் நம்பர் 1 லீக் தொடரில் இப்படி நடக்கலாமா? ஸ்டன் ஆன மைதானம்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று சிஎஸ்கே மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

Recommended Video

    CSK வீரர்கள் பரிதாபமாக Wicket! Mumbai Indians அபாரம் ? | Oneindia Tamil

    2022 ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி உள்ளது. ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

    மீதம் உள்ள 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி பெருமைக்கு வேண்டுமென்றால் ஆடும். மும்பை அணி முதல் அணியாக ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் சிஎஸ்கே இரண்டாவது அணியாக இந்த வாய்ப்பை இழந்துள்ளது.

    இதான் சிஎஸ்கே பிளானா? இதுக்குத்தான் அன்னைக்கு அப்படி சொன்னாரோ.. உற்சாகத்தில் டிரெஸ்ஸிங் ரூம்.. ஏன்? இதான் சிஎஸ்கே பிளானா? இதுக்குத்தான் அன்னைக்கு அப்படி சொன்னாரோ.. உற்சாகத்தில் டிரெஸ்ஸிங் ரூம்.. ஏன்?

    மோசம்

    மோசம்

    சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் இந்த சீசனில் ஆடி உள்ளது. இதில் கடந்த 4 போட்டிகளை சிஎஸ்கே அணி தோனி கேப்டன்சியில் ஆடியது. இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே இதில் சிஎஸ்கே வென்றுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் வென்றால் கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல முடியாது. அதிலும் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது.

    தோல்வி

    தோல்வி

    நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் 14.5 ஓவரில் 103 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி எடுத்து வென்றது. நேற்று சிஎஸ்கே அணியில் கான்வே, மொயின், தீட்சனா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். ருத்துராஜ் 7, உத்தப்பா 1 ரன்களை எடுத்தனர்.

    தோனி

    தோனி

    தோனி மட்டும் சிறப்பாக ஆடி 33 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட் எடுத்தார். இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. சிஎஸ்கே வீரர் கான்வாய் நேற்று சாம்ஸ் ஓவரில் டக் அவுட் ஆனார். இவருக்கு நடுவர் lbw கொடுத்தார். ஆனால் மைதானத்தில் இருந்த பலருக்கும் இது விக்கெட் இல்லை என்று தெரியும்.

    ரிவ்யூ இல்லை

    ரிவ்யூ இல்லை

    இதனால் கான்வாய் ரிவ்யூ எடுத்து இருக்கலாம். ஆனால் அங்குதான் திருப்பமே.. அவரால் ரிவ்யூ எடுக்க முடியவில்லை. காரணம் வான்கடே மைதானத்தில் மின்சாரம் இல்லை. மும்பையில் பல பகுதிகளில் நேற்று மின்தடை பிரச்சனை இருந்தது. பெரிய மைதானம் என்பதால் விளக்குகளுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது. மற்றபடி வேறு தொழில்நுட்பங்களுக்கு மின்சாரம் இல்லை.

    கான்வாய் அவுட்

    கான்வாய் அவுட்

    அதாவது அல்ட்ரா எட்ஜ் பார்க்கும் ஈசிஜி சாதனம், உள்ளே இருக்கும் கணினிகள் ஆகியவற்றை இயக்க போதிய மின்சாரம் இல்லை. இதனால் அவரால் ரிவ்யூ எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தான் விக்கெட் இல்லை என்று தெரிந்தும் அவர் பெவிலியன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதி கூட இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ரசிகர்கள் கேள்வி

    ரசிகர்கள் கேள்வி

    ஐபிஎல் என்பது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக். அதிக பணம் பயன்படுத்தப்படும் மாஸ் கிரிக்கெட் லீக் இது. இதில் ஆடுவதை பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் விரும்பி வருகிறார்கள். அப்படி இருக்கும் போது மின்தடை காரணமாக ஆட்டத்தில் பிரச்சனை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகின் நம்பர் 1 லீக் தொடரில் இப்படி நடக்கலாமா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

    English summary
    IPL 2022: Why CSK Convoy could not review his wicket against MI? நேற்று சிஎஸ்கே மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X