2 மேட்ச்.. ஒன்று உள்ளே.. இன்னொன்று வெளியே.. தோனி பிளான்.. சிஎஸ்கே வெற்றிக்கு காரணமான 4 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிக்கு 4 விஷயங்கள் முக்கியமான காரணமாக மாறி உள்ளன.

2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது.

IPL 2023 CSK: What are the 4 reasons behind the consecutive victories of Chennai Super Kings?

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ருத்துராஜ் இந்த மேட்சிலும் அதே வேகத்தில் அடித்து ஆடினார். 31 பந்துகள் பிடித்தவர் 3 பவுண்டரி , 4 சிக்ஸர் அடித்தார். 57 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் 29 பந்துகளில் கான்வே 47 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் அடக்கம். இதன் பின்பு தான் சிஎஸ்கே அணி மேட்சில் சிறிய மாற்றம் செய்தது. மொயின் அலியை தோனி களமிறக்காமல் துபேவை களமிறக்கினார்.

புதிய பந்தில் கொஞ்சம் நன்றாக ஆட கூடிய துபே ஒன் டவுன் இறங்கியது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியது. தோனியின் இந்த முடிவு சிஎஸ்கேவிற்கு உதவியது. வெறும் 16 பந்துகளில் 3 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 27 ரன்கள் எடுத்தார். பின்னர் மொயின் அலி 19, அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுத்தனர். தோனி கடைசியில் வந்து 3 பந்தில் 2 சிக்ஸ் அடித்து 12 ரன்கள் எடுத்தார்.

இதனால் சிஎஸ்கே அணி 217-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோவில் கே எல் ராகுல் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கைலி மையர்ஸ் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து 22 பந்தில் 53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். பின்னர் ஸ்டோனிஸ், க்ருனால், ஹூடா வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிஎஸ்கே எளிதாக வென்றது .

IPL 2023 CSK: What are the 4 reasons behind the consecutive victories of Chennai Super Kings?

இதையடுத்து நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வென்றது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டனர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டனர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.

ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.

IPL 2023 CSK: What are the 4 reasons behind the consecutive victories of Chennai Super Kings?

இந்த இரண்டு தொடர் வெற்றிகளுக்கு பின் தோனியின் சரியான திட்டமிடலும், பின் வரும் 4 காரணங்களும் உள்ளன.

காரணம் 1 - சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது. இருந்தும் கூட டாப் ஆர்டரில் உள்ள ருத்துராஜ், கான்வே, மொயின் அலி , ரஹானே நன்றாக ஆடுகிறார்கள்.

காரணம் 2 - எதிர்பார்க்காத விதமாக சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரும் நன்றாக உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளாக துபே, ராயுடு சிறப்பாக ஆடுகிறார்கள்.

IPL 2023 CSK: What are the 4 reasons behind the consecutive victories of Chennai Super Kings?

காரணம் 3 - சிஎஸ்கே அணிக்கு ஸ்பின் பவுலிங் மீண்டும் பலம் கொடுத்துள்ளது. சென்னையில் நடக்கும் போட்டியிலும் சரி, வெளியே நடக்கும் போட்டியிலும் சரி ஸ்பின் பவுலிங் பெரிய அளவில் கைகொடுக்கிறது . கடந்த இரண்டு போட்டியிலும் சான்டனர், மொயின், ஜடேஜா இவர்கள்தான் சிஎஸ்கேவின் டாப் விக்கெட் டேக்கர்கள்.

காரணம் 4 - தோனியின் சிறப்பான கேப்டன்சி. அவர் கொடுத்த பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப், இம்பாக்ட் வீரர்களை பயன்படுத்திய விதம் பெரிய அளவில் பயனை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+