சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் புதிய வரலாறு படைத்த புவனேஷ்குமார்.. மலிங்கா, பும்ரா கூட டச் பண்ணலயே
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆயுஷ் மாத்ரே விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் புவனேஷ் குமார் இந்த சாதனையை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த இந்த பட்டியலில் முதல் நபராக இடம் பிடித்தார். எனினும், முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை புவனேஷ்குமாருக்கு கிடைத்துள்ளது.

மலிங்கா, பும்ரா கூட டச் பண்ணல
192 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்குமார் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது பந்து வீச்சு சராசரி 27.25 ஆக உள்ளது. ஐபில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சஹால் இதுவரை 176 போட்டிகளில் விளையாடி 224 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் இடத்தில் புவனேஷ்குமார் உள்ளார். மூன்றாம் இடத்தில் சுனில் நரைன் உள்ளர். இவர் 191 போட்டிகளில் விளையாடி 193 ரன்களை சேர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வந்த மலிங்கா, மும்பை அணிக்காக விளையாடி வரும் பும்ரா ஆகியோரால் கூட எட்ட முடியாத இந்த சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே விக்கெட்டை வீழ்த்தி
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் மலிங்கா 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல, நட்சத்திர வீரர் பும்ரா 147 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணி புரட்டி போட்டது. இந்தப்போட்டியில் அசத்தலாக பந்து வீசிய புவனேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 41 ரன்களை விட்டு கொடுத்தார். ஆனாலும் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரேவை புவனேஷ்குமார் வீழ்த்தியதன் மூலம் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். புவனேஷ்குமார் வீசிய பந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே length பந்தாக சென்றது. இதை மாத்ரே புல் ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் சரியான டைமிங் கிடைக்காததால், பந்து மிட் ஆப் தலைக்கு மேலே சென்றது.
43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இதை கச்சிதமாக ஆர்சிபி கேப்டன் ராஜத் படிதார் பிடித்தார். இந்த விக்கெட்டை இழந்த பிறகு சென்னை அணி மீண்டு வர கடும் பாடு பட்டது. இமாலய இலக்கை நோக்கி விளையாடியதால், சென்னை அணிக்கு ஒருபக்கம் பிரஷரும் அதிகமாக இருந்தது. சர்ப்பராஸ் கான் (50 ரன்கள்) ஒருபக்கம் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதனால், நேற்றைய போட்டியில் சென்னை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications