"துணியால்" மறைத்து கொண்டுவரப்பட்ட "CSK ஐபிஎல் கப்".. சின்ன திருப்பதி ஏழுமலையான் காலடியில்.. ஸ்பெஷல்ஸ்
சென்னை: 5வது முறையாக ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே வென்றெடுத்த கோப்பைக்கு, சின்ன திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று முதல் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடியே உள்ளன.. உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியானது, பரபரப்பாகவும், திடீர் திருப்பங்களுடனும் நடந்து முடிந்துள்ளது..

குஜராத் அணி: விளையாட்டின் நடுவில், சிஎஸ்கே ரசிகர்கள் பதற்றமடைந்தனர்.. கலக்கமடைந்தனர்... கடைசியில் 214 ரன்கள் எடுத்தது குஜராத் அணி.. 215 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.. அத்துடன் கோப்பையையும் கைப்பற்றியது.
இந்த விளையாட்டில் ஜடேஜாவின் அதிரடி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.. ஐபிஎல் என்றாலே சிஎஸ்கேதான் என்ற வெற்றியை இந்த முறையும் தோனி தக்கவைத்துள்ளார்.. ஜடேஜாவை கட்டி அணைத்து, பாராட்டினார்.. வெற்றி பெற்ற தருணமும், வீரர்கள் ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்ட தருணமும், உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தன..
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல்வேறு தரப்பினர், பாராட்டுக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. நேற்று முதல், சூப்பர் கிங்ஸ் டீம் ரசிகர்கள், இணையத்தில், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு, இந்த வெற்றியை திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.
சின்ன திருப்பதி: சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அணி நிர்வாகிகள் வெற்றி கோப்பையோடு இன்று சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தனர். சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களோடு ஐபிஎல் வெற்றி கோப்பையில் எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் வெற்றி கோப்பையுடன், சின்ன திருப்பதிக்குள் நுழைந்து, சிறப்பு பூஜையும் நடத்தியிருக்கிறார்கள்.. ஆம், தியாகராய நகரில் உள்ளது திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில்தான் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சிஎஸ்கே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் வைத்து பூஜை செய்தனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான என். சீனிவாசன் கலந்து கொண்டார்..

சிறப்பு பூஜை: மேலும், தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்ட அணியின் நிர்வாக குழுவினர் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள ஏழுமலை வெங்கடாசலபதி முன்பு வைத்து பூஜையை செய்தனர்... முன்னதாக, அந்த கோப்பையை கோயிலுக்கு கொண்டுவரும்போது, வெள்ளை துணியால் மறைக்கப்பட்டு எடுத்து வந்தனர்.. பிறகு, ஏழுமலையான் காலடியிடல் வைத்து கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது..
இறுதியில் கோவிலுக்கு வெளியில் கொண்டுவரப்பட்டது.. அந்த கோப்பையை பார்த்ததுமே, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.. கோப்பையை பொதுமக்கள் முன்பு காண்பித்து மக்களை நிர்வாகிகள் உற்சாகப்படுத்தினார்கள்..
இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த கோப்பை சென்னையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications