உடைந்த கண்ணாடியை குப்பைத் தொட்டியில் போடுறீங்களா? இப்படி போடுங்கள்! ஐபிஎஸ் அதிகாரியின் விழிப்புணர்வு
சென்னை: வீட்டில் கண்ணாடி துண்டு உடைந்துவிட்டால் அதை எப்படி குப்பையில் போட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பதிவை ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் அறிவுறுத்தலாகும். ஆனால் இன்று நாம் எல்லா குப்பைகளையும் ஒன்றாகவே கொட்டி நிலத்தடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறோம்.

பிளாஸ்டிக் உள்ளிட்டவை மண்ணில் பதிந்து செடிகளுக்கும், நல்ல நுண்ணுயிரிகளுக்கும் தீங்கை விளைவிக்கின்றன. இதனால்தான் குப்பைகளை பிரித்து போட வேண்டும்.
அதாவது சமைத்த, சமைக்காத உணவு வகைகள், பழங்கள், பூக்கழிவுகள், உதிர்ந்த இலைகள், எளிதில் மக்கும் கழிவுகளை பச்சை நிற பக்கெட்டில் போட வேண்டும். அது போல் பாலித்தீன் கழிவுகள் காகிதங்கள், மர வகைகள், உலோகங்கள், கண்ணாடி, கம்பிகள், தோல் பொருட்கள், அட்டைகள் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை மக்காத குப்பையான நீல நிற பக்கெட்டில் கொட்டி வைக்க வேண்டும்.

அது போல் மருத்துவமனைகளில் உடல் பாகங்கள், ரத்தம் தோய்ந்த பொருட்கள், விலங்குகளின் உடல் பாகங்கள் உள்ளிட்டவைகளை சிகப்பு நிற பக்கெட்டில் கொட்ட வேண்டும். இவை எப்போதும் ஆபத்தானவை என்பதால் இப்படி தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளில் போடப்படும் உணவு பொருட்களை நாய்கள், பூனைகள் மாடுகள் உள்ளிட்டவை சாப்பிடும்.
நாம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை ஒன்றாக போட்டால் பிளாஸ்டிக் பொருட்கள் அதன் வாயில் சிக்கி விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை விட சிலர் வீட்டில் உடைந்த கண்ணாடி சில்லுகளையும் மக்கும் குப்பையில் போடுவதால் அதில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வரும் விலங்குகளுக்கு கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்படுகின்றன.

இதனால் அதன் முகமே சிதைந்து, பார்வை பறிபோய், கழுத்து வெட்டுப்பட்டு, சில நேரங்களில் விலங்குகள் இறக்கவும் நேரிடுகின்றன. இதனால் கண்ணாடிகள் உடைந்தால் எப்படியெல்லாம் அதை குப்பையில் போட வேண்டும் என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோ உள்ளது. அதை ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு கண்ணாடி கப் கைத்தவறி விழுந்து விடுகிறது. அதை முறத்தில் வாரும் பெண், அப்படியே குப்பையில் கொட்ட போகிறார், அங்கு வரும் ஒருவர் அவரை தடுக்கிறார். உடனே அந்த கண்ணாடி சில்லுகளை ஒரு துணியில் கொட்டி அதை நன்றாக சுற்றி, பிளாஸ்டிக் கவரில் போட்டு அந்த கவரின் வாய்களை செல்லோ டேப் போட்டு நன்கு ஒட்டி விட்டு குப்பையில் போடுகிறார். இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications