கத்தார் ‘ஷாக்’.. எரிவாயு உற்பத்தி பூஜ்ஜியம் ஆகிவிட்டது! ஈரான் அடியால்.. தத்தளிக்கும் வளைகுடா நாடுகள்
சென்னை: "எண்ணெய் கிணறுகளின் சொர்க்கம்" என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது எரிவாயு உற்பத்தி முற்றிலும் முடங்கியிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள், ட்ரோன் அச்சுறுத்தல்கள் எனப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமீரகத்தின் இந்த அதிரடி முடிவு உலக நாடுகளை உலுக்கியெடுத்துள்ளது!
நடந்தது என்ன?
கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல், இப்போது அமீரகத்தின் எரிசக்தி மையங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் காரணமாக மொத்தமாக மத்திய கிழக்கே முடங்கி உள்ளது. குறிப்பாக, அபுதாபியின் மிக முக்கியமான 'ஷா' (Shah) எரிவாயு ஆலை மற்றும் 'ஹப்ஷன்' (Habshan) எரிவாயு வளாகங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் பதற்றம் உருவானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், விழுந்த ஏவுகணைத் துகள்களும், ஏற்பட்ட தீவிபத்துகளும் தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ஏன் இந்த 'சஸ்பெண்ட்' நடவடிக்கை?
பாதுகாப்பு கருதியும், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தினாலும், அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC, தனது முக்கிய எரிவாயு உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
ஷா எரிவாயு ஆலை: இது அமீரகத்தின் 20% எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் மையம். அமீரகத்தின் 'ஷா' எரிவாயு வயலானது சுமார் 180 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் உலகின் மிக முக்கியமான எரிசக்திப் புள்ளி. இங்கிருந்து தினசரி 1.28 பில்லியன் கன அடி எரிவாயு உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹப்ஷன் வளாகம்: உலகின் மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று.
உற்பத்தி நிலை: தற்போது இந்த ஆலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதால், நாட்டின் ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தி 'பூஜ்ஜியம்' (Zero) என்ற நிலையைத் தொட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் 'பகீர்' கிளப்பும் பாதிப்புகள்:
அமீரகத்தின் இந்த அறிவிப்பு வெறும் ஒரு நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல.
உரம் தட்டுப்பாடு: உலக அளவில் உரத் தயாரிப்புக்குத் தேவையான 'சல்பர்' விநியோகத்தில் 5% இந்த ஒரு இடத்திலிருந்துதான் கிடைக்கிறது. இதனால் விவசாயத் துறை சிக்கலைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
மின்சாரத் தட்டுப்பாடு: அமீரகத்தின் உள்நாட்டு மின் உற்பத்தியில் 60% எரிவாயுவை நம்பியே உள்ளது.
விலையேற்றம்: ஏற்கெனவே 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகக் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உற்பத்தி முடக்கம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை விண்ணைத் தொட வைத்துள்ளது.
அமீரகத்தின் அடுத்த கட்டம் என்ன?
எரிவாயு உற்பத்தி முடங்கியுள்ள போதிலும், அமீரகம் தனது 2050 'நெட் ஜீரோ' (Net Zero) இலக்கை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், தற்போதைய போர் சூழல் அந்தப் பயணத்திற்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. "பாதுகாப்பே முதன்மையானது" எனத் தெரிவித்துள்ள அமீரக அரசு, நிலைமை சீரானதும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த சில வாரங்கள் உலக எரிசக்திச் சந்தைக்கு மிகவும் சவாலான காலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வளைகுடாவின் இந்தத் தற்காலிக 'அமைதி', உலகப் பொருளாதாரத்தில் எந்த மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications