ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா யுத்தம்.. எந்தெந்த நாடுகள் யாருக்கு ஆதரவு? லிஸ்ட்
வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை முன்னெடுத்து இருக்க கூடிய நிலையில், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரானும் பதிலடியை தொடங்கியிருப்பதால் துபாய் உள்பட மத்திய கிழக்கில் பல பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான இந்த சூழலில் ஈரானுக்கு ஆதரவாக நிற்பது யார்? அமெரிக்கா, இஸ்ரேல் பக்கம் நிற்கும் நாடுகள் எது என்பது பற்றி பார்க்கலாம்.
ஈரான் மீது மிகப்பெரும் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்துள்ளன. பல மாதங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை என்று இந்த தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியுள்ளன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. அவர் மட்டுமின்றி ஈரானின் உச்சபட்ச பொறுப்பில் உள்ள அதிபர் மசுத் பெஸெகியான் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடப்பதாக தெரிகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை நோக்கி குண்டு மழை பொழியும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலை தொடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், குவைத், ரியாத் மற்றும் கத்தாரின் சில இடங்களில் வெடி சத்தம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த நாடுகள் யாருக்கு ஆதரவு?
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போருக்கு நடுவே எந்த நாடுகள் யாருக்கு ஆதரவு என்ற விவரங்களை பார்க்கலாம். ஈரானுக்கு லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா, ஈராக்கில் உள்ள மொபிலிசேஷன் படைகள் (PMF), ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவின் ஹமாஸ் ஆகியவை ஆதரவாக உள்ளன.
அதேபோல, ஈராக் மற்றும் ஏமனில் ஈரானுக்கு வலுவான ஆதரவு உள்ளது. அதுமட்டும் இன்றி கடந்த சில வாரங்களாக ஈரான், ரஷ்யா, சீனா இடையே கவனித்தக்க வகையில் ராணுவ ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானும் ஈராக்கிற்கு ஆதரவாக உள்ளது.
கத்தார், குவைத் நாடுகள்
எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற மோதலின் போது பாகிஸ்தான் ஆதரவு கொடுக்காமல் விலகி கொண்டது. அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் என்று பார்த்தால், மத்திய கிழக்கில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் ஆகியவை ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளன.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களின் வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. கத்தாரும் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவையும் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இத்தாலி, பிரான்ஸ் நிலைப்பாடு
இருப்பினும், இந்த தாக்குதல்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஏதேனும் முன் எச்சரிக்கை வழங்கப்பட்டதா? என்பது தெளிவாக இல்லை. அமெரிக்கா- இஸ்ரேல் மேற்கொண்டு இருக்கும் தாக்குதலில் பிரான்ஸ் படையும் உள்ளதா என்று கேட்ட போது, அது குறித்து பட்டும் படாமல் பிரான்ஸ் கருத்து தெரிவித்தது.
பதற்றத்தை தணிக்கும் வகையில் ஏதேனும் முயற்சிகள் எடுப்பது தொடர்பாக இன்னும் சில மணி நேரங்களில் கூட்டணி மற்றும் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக இத்தாலியும் கூறியுள்ளது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications