நெறியாளரை ஹிஜாப் போட சொல்லுங்க.. அமெரிக்கா போய் வம்பிழுத்த ஈரான் அதிபர்.. இந்த போட்டோவை பாருங்களேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அங்கு ஹிஜாப்பை சரியாக அணியாததால் பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில்தான் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு இடையில் ஈரான் அதிபரின் செயல் ஒன்று இணையம் முழுக்க கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஈரானில் கடந்த சில நாட்களுக்கு முன் 22 வயது மாசா அமினி என்ற மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடந்த செப்டம்பர் 13ம் தேதி இவர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்ற போது அங்கு "கலாச்சார போலீசார்" மூலம் கைது செய்யப்பட்டார்.

அவர் சரியாக ஹிஜாப்பை அணியாமல், முடி வெளியே தெரியும்படி ஹிஜாப் அணிந்து இருந்ததால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப்

ஹிஜாப்


தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் மோசமாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே இவரின் தலையில் இரும்பு கம்பியை வைத்து அடித்தாள் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதோடு அங்கே இருந்த வாகனம் ஒன்றில் அமினியின் தலையை முட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில்தான் அவருக்கு இதய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் . இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோமா

கோமா


சில நாட்கள் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரின் மரணம் ஈரானை உலுக்கி உள்ளது. அங்கு ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட தொடங்கி உள்ளனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்து பெண்கள் கடுமையான போராட்டங்களை செய்து வருகின்றனர்.தலைநகர் முழுக்க கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு ராணுவம் மற்றும் போலீசை களமிறக்கி உள்ளது.

இணையம்

இணையம்

அங்கே இணையம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை போராட்டத்தில் 31 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரானில் புதிய புரட்சியை இந்த போராட்டம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டங்களுக்கு இடையில் ஈரான் அதிபரின் செயல் ஒன்று இணையம் முழுக்க கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த போராட்டங்களுக்கு இடையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமெரிக்கா சென்றுள்ளார். அவரின் முதல் பயணம் ஆகும் இது.

அமெரிக்கா

அமெரிக்கா

இவர் அமெரிக்காவை சேர்ந்த சிஎன்என் நிறுவனத்தின் சர்வதேச செய்தியாளர் கிறிஸ்டின் அமான்போருக்கு பேட்டி கொடுப்பதாக இருந்தது. நேருக்கு நேர் இந்த பேட்டி நடப்பதாக இருந்தது. நியூயார்க்கில் இந்த பேட்டி எடுக்க இருந்த நிலையில், அதற்கான அரங்கு தயார் செய்யப்பட்டது. அதேபோல் அதற்கான விளக்கு, கேமரா எல்லாம் ரெடியாகி இருந்தது. ஆனால் அதிபர் ரைஸி மட்டும் வரவில்லை. அவர்.. அந்த பெண்ணை ஹிஜாப் அணிய சொல்லுங்கள். அப்போதுதான் வருவேன் என்று கூறி இருக்கிறார்.

கிறிஸ்டின் அமான்போர்

கிறிஸ்டின் அமான்போர்

அதற்கு செய்தியாளர் கிறிஸ்டின் அமான்போர், நான் அப்படி ஹிஜாப் அணிய முடியாது. இது ஈரான் இல்லை. இது அமெரிக்க மண். இங்கே அப்படி எந்த விதியும் இல்லை. நான் ஹிஜாப் அணிய முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல் இதற்கு முன் இங்கே வந்த ஈரான் அதிபர்கள் யாரும் இப்படி சொன்னது இல்லையே என்று அந்த பெண் கூறியுள்ளார். அதற்கு அதிபரின் உதவியாளர்.. இப்போது நிலை வேறு. எங்கள் நாட்டில் போராட்டம் நடக்கிறது.

ஹிஜாப் வழக்கு

ஹிஜாப் வழக்கு

எங்கள் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அதனால் நீங்கள் ஹிஜாப் அணிந்து பேட்டி எடுக்க வேண்டும். அதோடு இது முஹரம் மாதம் என்பதால் ஹிஜாப் அணிந்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் இதற்கு அந்த நெறியாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஈரான் அதிபர் பேட்டி கொடுக்காமல் சென்றுள்ளார்.ஈரான் அதிபரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+