விஜய் வீட்டில் ரெய்டு பண்ணது நானா? கட்சியில் சேர்ந்தவுடனே கேள்வி! சிரிச்சே சமாளிச்சுட்டாரு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானவரித்துறையில் பணியாற்றிய ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதே அருண்ராஜ் தான் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்வி அவரது செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட நிலையில் சிரித்தவாறு சமாளித்தார்.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அருண்ராஜ் ஐஆர்எஸ் தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜலட்சுமி, டேவிட் செல்வம், ஸ்ரீதர் உள்ளிட்ட வரும் கட்சிகள் இணைத்தனர்.

கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக அருண்ராஜ் நியமனம் செய்யப்படுவதாக விஜய் அறிவித்தார். இந்த நிலையில் விஜய்யுடன் சந்திப்பு நிறைவடைந்ததும் அருண்ராஜ் ஐஆர்எஸ், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Arunraj Vijay Tamilaga Vetri Kazhagam

அப்போது பேசிய அவர், மிகவும் மகிழ்ச்சியான நாள் இது. சின்ன வயசில் இருந்தே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளாடக்கிய அரசியல் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றம் வேண்டும் என விஜய் எடுத்திருக்கும் இந்த முயற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிற கட்சிகளில் இணைய வேண்டும் என்ற சாய்ஸ் எனக்கு இருந்ததே இல்லை.

ஏனென்றால் எல்லா கட்சிகளையும் எத்தனை வருஷமாக பார்த்து விட்டோம். 70 ஆண்டு பழமையான கட்சிகள் இருந்தாலும், தவெகவின் கொள்கைகளே தமிழகத்திற்கு தேவையானவை. முதலில் ஒரு சாமானிய மனிதன். நான் சாமானிய மனிதர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைப்பார்கள். நானும் அதையே தான் நினைத்தேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். நன்றாக பணி செய்தேன் என்ற திருப்தி இருந்தது. இதற்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

வருமான வரித்துறையில் அத்தகைய தலையீடுகள் பெரிய அளவில் இல்லை. சில சமயங்களில் சிறிய அழுத்தங்கள் இருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவை அல்ல. ஜனநாயக நாட்டில் மக்களிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தில் மட்டும் தான் கொள்கை பிடிப்பு உள்ளது. வேறு எந்த கட்சியிலும் இது இல்லை" என்றார்.

தொடர்ந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது நீங்களும் சோதனையில் ஈடுபட்டீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் அருண்ராஜ் சிரிக்க அருகில் இருந்த ஆதவ் அர்ஜுனா இல்லை இல்லை என்றார். அதையே அருண் ராஜும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் தீடிரென அந்த வழக்கு நீர்த்து போனது என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அருண்ராஜ் அதனை மறுத்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+