"பான் கார்ட்".. உங்க கையில் ரூ. 2000 நோட்டு இருக்கிறதா? மாற்ற போவதற்கு முன் இதை முதலில் படிங்க
சென்னை:2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை ஆர்பிஐ வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகளில் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
ஏன் நீக்கம்?
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.
அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது 2000 ரூபாயும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
1000 ரூபாய் நோட்டுகளை நீக்கிய போது ஏற்படும் திடீர் பண பற்றாக்குறையை போக்கவே 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக ஆர்பிஐ கூறியுள்ளது. தற்போது பண புழக்கத்தில் 10.8 சதவிகிதம் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன.
இதன் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 2000 ரூபாய் இல்லாமலே பணப்புழக்கம் முறையாக உள்ளது. அதனால் இப்போது இதை திரும்ப பெறுகிறோம் என்று ஆர்பிஐ அறிவித்து உள்ளது.
இன்றில் இருந்து கொடுக்கலாம்
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் அட்டை:
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பான் அட்டை தேவை இல்லை.
20 ஆயிரம் ரூபாய் வரை எந்த ஆவணங்களும் இல்லாமல் வங்கிகளில் மாற்ற முடியும்.
20 ஆயிரத்திற்கு மேல் போனால் கேஒய்சி விபரங்களை கொடுக்க வேண்டும். அதாவது பணம் மாற்றும் நபரின் பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் எத்தனை 2000 நோட்டுகள் உள்ளன என்ற எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பு போன்ற .விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்யப்படும் இடம் மற்றும் தேதியையும் குறிப்பிட வேண்டும்.
50 ஆயிரம் ரூபாய் வரை பான் கார்ட் அவசியம் இல்லை.
50 ஆயிரத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய பான் கார்ட் அவசியம். அது இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போதும் பொருந்தும்.
இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications