தாமரை உடையில் சுகன்யா! ‘திராவிடம்’ மீது அட்டாக்? அரசியலுக்கு வருகிறாரா?
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை சுகன்யா. நயன்டீஸ் கிட்ஸ் மறக்க முடியாத நாயகி.
இவர் நடித்த 'சின்னக் கவுண்டர்', 'இந்தியன்' ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டன. அவரது நடிப்புக்காக பலரும் பாராட்டினர். ஆக, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க வேண்டிய தேவை என்ன?

அதுவும் அவர், 'ஜெய் ஸ்ரீ ராம்' ஆல்பம் ஒன்றையும் அவரே எழுதி, பாடியும் இருக்கிறார். அந்த ஆல்பத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் அவர் அணிந்திருக்கும் உடை இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
அந்த உடை முழுவதும் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஆகவே அவர் பாஜக சார்பாகத் தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படுவார் என்று முணுமுணுப்புகள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

என்ன ராமர் வரும்போது புதிய அவதாரம் என்று அவரைக் கேட்டால், "500 வருடங்கள் கழித்து ராமர் வந்துள்ளார். ஆகவே நாம் அவரை வரவேற்க வேண்டாமா? நம்ம ஊரு, நம்ம நாடு இது" என்று பதில் அளிக்கிறார்.
"எங்கள் வீட்டில் ராமர் வழிபாடு பல ஆண்டுகளாக உள்ளது. என் பாட்டி இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். 'சிவகவி' என்ற படம். அது தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடித்த படம். அந்தப் படத்தில் பாட்டி பாடி நடித்த படம். அந்தக் காலத்தில் நடிகர், நடிகை என்றால் நடிப்புடன் சேர்த்துப் பாடும் திறமையும் இருக்க வேண்டும்.
பாட்டி நடித்த முதல் படம் 'சீதா கல்யாணம்'. அதில் ராமர் வேஷத்தில் நடித்தவர் நடிகை எஸ். ராஜம். அதில் சீதையாக நடித்தவர் என் பாட்டி. அவர் பெயர் எஸ். ஜெயலக்ஷ்மி. பாட்டியின் அண்ணாதான் எஸ்.ராஜம்.

என் பாட்டி மிகச் சிறந்த ராமர் பக்தர். என் அப்பாவும் ராமர் பக்தர். அவர் காசியிலிருந்து வாங்கி வந்த ஒரு ராமர் ஓவியம்தான் வீட்டுப் பூஜையில் நடுவில் இருக்கும். ஆக, ராமர் என் குடும்ப தெய்வம்" என்கிறார்.
எதற்காக இந்த ஆல்பம் முயற்சி என்றதற்கு, அவர், "500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நேரத்தில் நான் ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என நினைத்தேன்.
அதற்காகச் செய்ததுதான் எனது ஆல்பம். இது எனது சின்ன காணிக்கை. ராமர் கோயில் விழாவே உலகமே கொண்டாடுகிறதே? அதில் என் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டாமா?" என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார் நடிகை சுகன்யா.

"என் அப்பா கிட்டத்தட்ட 40க்கும் அதிகமாக ஆன்மிக புத்தகங்களை எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் தலைப்பு, ராமாமிருதம். அது ராமரைப் பற்றியது" என்றவரிடம் உங்களுக்கு அதிகமான ஆன்மிக ஈடுபாடு உள்ளதா? எனக் கேட்டதற்கு மறைமுகமாக அவர் அரசியலைத் தொட்டு பதில் சொல்லி இருக்கிறார்.
"ஆன்மிகம் என்பது தனியாக இல்லை. குழந்தையிலிருந்து வீட்டில் சொல்லிச் சொல்லித்தான் வளர்க்கிறார்கள். நாமும் அதைப் பார்த்துத்தான் வளர்கிறோம். பல கோயில்களை தொல்லியல் துறைகள் தோண்டி எடுக்கும் போது அது 2 ஆயிரம் வருடம், இது ஆயிரம் வருடம் என்று சொல்கிறார்கள்.

ஆக, பல ஆண்டுகள் முன்பு இருந்த அந்தக் கலாச்சாரம் நம்மிடம் உள்ளது. சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அவர்களின் வீட்டில் உள்ளவர்கள் நம்மைவிட அதிகமாக சாமி கும்பிடுகிறார்கள். சடங்குகளைச் செய்கிறார்கள். அதைப் பார்த்தால் தான் எனக்கே இப்படி எல்லாம் ஒரு சடங்குகள் இருக்கிறதா என்று தோன்றுகிறது. இது தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை. அவ்வளவுதான்" என்கிறார் சுகன்யா.
ஏன்? சில ஆண்டுகளாக நடிக்கவில்லை. இந்த இடைவெளி எதற்காக? என்றோம். தான் நடிப்பதை என்று நிறுத்தவில்லை என்றும், முதலில் வருடத்திற்கு 5 படங்களில் நடித்து வந்ததாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 3 ஆகக் குறைந்ததாகவும் கூறிய அவர் மீண்டும் நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வமாகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஆல்பம் வெளியீட்டுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் ஏன் தாமரை உள்ளது? அரசியலுக்கு வர ஆசை உள்ளதா? என்றால்,
"எனக்கு இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது என்றே நம்புகிறேன். எனக்கு என்றும் கலை மீதுதான் முழு ஈடுபாடு இருந்துள்ளது. இந்தக் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கே இந்த ஒரு ஆயுள் எனக்குப் போதாது. வாழ்க்கை முழுவதுமே கற்றுக் கொள்ளாவதற்கே சரியாகப் போய்விடுகிறது. ஆகவே, எனக்கு அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்கிறார்.



-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications