விஜய்க்காகவா? தேர்தல் ரிசல்ட் நாளில் திரிஷா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. அட இன்று பிறந்தநாள் வேறயாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்நிலையில் தான் தேர்தல் ரிசல்ட் நாளான இன்று நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது விஜய்யின் தேர்தல் வெற்றிக்காக அவர் பதிவை போட்டுள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

is-actress-trisha-going-tirupati-for-vijay-victory-in-tamil-nadu-election-or-her-birth-day

விஜய்க்கு இது முதல் சட்டசபை தேர்தல். இருப்பினும் 'ஆக்சிஸ் மை இந்தியா' நடத்திய எக்ஸிட் போல் ரிசல்ட்டில் விஜய் தனித்து ஆட்சியை பிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னாள் டிஜிபி ரவி நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பிலும் விஜய் 121 தொகுதிகள் வரை வெல்ல சான்ஸ் இருப்பதாக கூறியுள்ளார்.

திரிஷாவின் ஸ்டோரி

இதனால் தவெகவினர் ஹேப்பியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ரிசல்ட் நாளில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திரிஷா காரில் பயணிப்பதும், காரின் முன்புறம் 'திருப்பதி' என்ற பெயர் பலகை இருப்பதும் தெரிகிறது. இதன்மூலம் திரிஷா திருப்பதி செல்வதை உறுதி செய்துள்ளார்.

is-actress-trisha-going-tirupati-for-vijay-victory-in-tamil-nadu-election-or-her-birthday

விஜய்க்காகவா திருப்பதி?

விஜய்க்கும், திரிஷாவும் 5 திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்நிலையில் தான் விஜய்க்காக, திரிஷா திருப்பதி சென்று இன்று வழிபாடு நடத்துவதாக தகவல்கள் பரவி வருகிறது. விஜய் மற்றும் தவெகவின் வெற்றிக்காக அவர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய பயணிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதனை திரிஷா இன்னும் உறுதி செய்யவில்லை.

இன்று திரிஷா பிறந்தநாள்

அதேவேளையில் இன்னொரு முக்கிய விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று தேர்தல் ரிசல்ட் நாள் என்பது மட்டுமின்றி திரிஷாவுக்கான ஸ்பெஷல் நாளாகவும் இது உள்ளது. ஏனென்றால் இன்று தான் திரிஷாவிற்கு பிறந்தநாளாகும். இதனால் அவர் தனது பிறந்தநாளையொட்டி கூட திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு செல்லலாம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திரிஷா - திருப்பதி பந்தம்

ஏனென்றால் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களின் ஸ்பெஷல் நாட்களில் திருப்பதி ஏழுமைலயான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு திரிஷாவும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் கூட திரிஷா, திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருந்தார். இதனால் திரிஷாவின் திருப்பதி பயணம் அவருக்கு பிறந்நாளுக்கான வேண்டுதலாக இருக்குமா? இல்லாவிட்டால் விஜய்யின் தேர்தல் வெற்றி சார்ந்ததாக இருக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+