எஸ்.. இல்லை.. நோ.. பாஜகவை போட்டு குழப்பி எடுத்த எடப்பாடி பழனிசாமி.. தலையை பிய்த்துக்கொள்ளும் தலைகள்
எடப்பாடி பழனிசாமியின் திருநெல்வேலி பேட்டியால் பாஜகவினர் குழம்பிப்போய் உள்ளனர்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுவது புரியாமல் பலர் குழம்பி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
இவர் சார்பாக தற்போது தீவிர பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. பாஜகவும் அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக ஆதரவு எடப்பாடி பேச்சு
இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசினார். திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி, அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று கூறினார்.

கூட்டணி சிக்கல்
அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த பேட்டியில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு பேசி உள்ளார். முதல் விஷயம் நாடாளுமன்ற தேர்தலில் இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடரும். இடைத்தேர்தலில் வரும் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறினார்.

எதிரொலி
இரண்டாவதாக, அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம், என்று கூறி உள்ளார். ஒரே கேள்விக்கு எஸ், நோ என்று பதில் சொல்வது போல.. எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடரும் என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம், என்று கூறி உள்ளார். அதோடு இல்லாமல் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என்றும் சுருக்கென கேள்வி கேட்டுள்ளார்.

பாஜக குழப்பம்
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டியால் பாஜகவினர் குழம்பிப்போய் உள்ளனர். கூட்டணி தொடரும் என்று சொல்கிறாரா? இல்லை கூட்டணியை மாற்றுவோம் என்று சொல்கிறாரா என்று தெரியாமல் பாஜகவினர் குழம்பிப்போய் உள்ளனர். இது தொடர்பாக அதிமுகவினர் சிலர் நம்மிடம் பேசியதில், இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. இதனால் அவர்களின் வாக்குகளை கவர எடப்பாடி இப்படி பேசி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக எடப்பாடி காட்டிக்கொண்டு உள்ளார். ஆனால் சட்டசபை தேர்தலில் 2026ல் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்தான். அதை உணர்த்தும் வகையிலேயே சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம், என்று கூறி உள்ளார். அதை குறிப்பிட்டே அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என்றும் எடப்பாடி கூறி உள்ளார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications