உடைகிறதா அதிமுக? கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடும்.. சிவி சண்முகம் பேட்டி
சென்னை: அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் அதே வேளையில், காலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 பேர் கடிதம் அளித்திருந்தனர். தற்போது, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும் என பதில் அளித்தார்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது அந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கட்சி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருந்தும் அதனை அதிமுக சரியாக பயன்படுத்தி கொள்ளாததே, இந்த தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில் எடப்பாடிக்கு எதிராக 36 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏக்கள் தனியாக 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏனென்றால் 3-இல் 2 பங்கு பிரிந்து சென்றால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பதால் இந்த முடிவை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
இதனால் அதிமுக பிளவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்று காலையில் சட்டசபை கூடிய போது எடப்பாடி தலைமையில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களும் வருகை தந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடியை ஆதரித்து கடிதம் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மாலையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 34 எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தனர். அப்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணியை சிவி சண்முகம் தரப்பு முன்மொழிந்தது கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதிமுக உடைகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிவி சண்முகம், "இவ்வளவு நாள் அமைதியாக இருந்தீங்கள்ளா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிஞ்சிடும்.. நாங்களே எல்லாத்தையும் கூறுகிறோம்" என கூறிவிட்டு சென்றனர். தற்போதைய நிலவரப்படி எடப்பாடி தலைமையில் 17 எம்.எல்.ஏக்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 30 எம்.எல்.ஏக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த குழப்பங்களால், தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications