Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பேசுவதை விடுங்க! ரிசல்ட்டுக்கு முன் அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்! இரட்டை இலை பதறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக கேம்பில் திடீரென சலசலப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

உதாரணமாக நேற்று நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Is AIADMK camp getting the heat of low response in Tamil Nadu Lok Sabha elections 2024

மாஜி அமைச்சர் பேச்சு: இந்த விவகாரத்திற்கு இடையே நேற்று மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து இன்னொரு குண்டை போட்டார். அவர் அளித்த புகாரில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சரியாக இல்லை. வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் 20 ஆயிரம் பெயர்கள் காணவில்லை.

கடந்த முறையை விட இந்த முறை வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆனால் அதிகரிக்கவில்லை. இதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. என் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். கோவில்பட்டி தொகுதியில் கடந்த முறையை விட இந்த முறை 14 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது.

வாக்குகள் அதிகரிக்க வேண்டும். ஆனால் இங்கே குறைந்துள்ளது. வாக்கு சதவிகிதம் கூட மாற்றி மாற்றி பாஜக மூலம் கொடுக்கப்படுகிறது. இது எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குளறுபடியாக இருந்தது. எதிர்காலத்தில் முறையாக செயல்படுங்கள்., என்று மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

திமுக பதிலடி: அதிமுகவினர் தோல்வி பயத்தில் இப்படி பேசுவதாக திமுக நெட்டிசன்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தோல்வி உறுதியாகிவிட்டதால் இப்போதே வாக்காளர்களை காணவில்லை என்ற அஸ்திரத்தை அதிமுக எடுத்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

முன்னதாக கோவையில் அண்ணாமலை இதே புகாரை வைத்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை , "கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியுள்ளனர் எனத் தெரியவில்லை, என்று கூறினார்.

ஆனால் இதை மாவட்ட தேர்தல் நிர்வாகி மறுத்தார். அதில், ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது, என்று பதிலடி கொடுத்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் கடம்பூர் ராஜுவும் இதே புகாரை பதிவு செய்துள்ளார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+