அடித்து சொன்ன திருமா.. பக்கமே வராத பாமக.. இப்போ அண்ணாமலையும் "இப்படி" சொல்லிட்டாரே.. அப்போ அதிமுக?
இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் என்றுள்ளார் அண்ணாமலை.
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியது அதிமுக தரப்பை கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அண்ணாமலையின் நிலைப்பாட்டால் எங்கே அதிமுக தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் முழக்கமிட்டு இருந்தார்.
இப்படிபட்ட நிலையில்தான் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது.

கூட்டணி
சமீபத்தில் சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா பாஜக, எதிராக கடுமையாக பேசினார். அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம். அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா? என்று கூறினார். இதையடுத்து அவர் திமுகவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பதாகவும், எதிர்காலத்தில் திமுக கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருமாவோடு திமுகவுடன் கூட்டணி தொடரும், அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அடித்து சொல்லிவிட்டார்.

திருமா
திருமா இது பற்றி வெளிப்படையாக விளக்கம் அளித்துவிட்ட நிலையில், பாமகவும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சந்தேகம் ஆகி உள்ளது. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.

தேமுதிக
அதேபோல் தேமுதிக பிரேமலதாவும், அதிமுக 4 ஆக பிரிந்துவிட்டது. நாங்கள்தான் எதிர்க்கட்சி போல செயல்பட்டு வருகிறோம் என்று கூறி உள்ளார். இது போக ஓபிஎஸ், அமமுக போன்றவர்களை எடப்பாடி தன்னுடன் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில்அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

என்ன சொன்னார்?
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

தனித்து விடுகிறார்களா?
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு ரெடியாகி இல்லை, தேமுதிக கூட்டணிக்கு தயாராக இல்லை, பாமக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டது, மநீம அதிமுகவை எதிர்த்து திமுகவுடன் சேர்ந்து விட்டது, காங்கிரஸ் திமுக கூட்டணியை முறிக்காது, விசிக்கவும் திமுக கூட்டணியை முறிக்காது. அப்படி இருக்கும் நிலையில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications