Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக களத்தில் இல்லையா? கமல்ஹாசன் மாதிரி விஜய்யும் போயிடக்கூடாது.. செல்லூர் ராஜூ செம டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: களத்தில் இல்லாதவர்களை நாங்கள் ஏன் பேச வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் விஜய் பேசியிருந்த நிலையில், இது தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எங்கள் கட்சி களத்தில் இல்லை என்று சொல்கிற அளவுக்கு அவனுக்கு என்ன தைரியம் இருக்கு என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும் களத்தில் இருப்பதால் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும், அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளையும் தன் பக்கம் இழுக்க தவெக முயற்சித்து வருகிறது.

sellur raju

விஜய்க்கு பதிலடி

எனினும் இதுவரை எந்த கட்சியும் தவெக கூட்டணியில் இணையவில்லை. ஆனாலும் விஜய் தொடர்ந்து திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என்று கூறி வருகிறார். களத்தில் இல்லாத கட்சிகளை பற்றியும், களத்துக்கே வராத கட்சியை எல்லாம் நாங்க விமர்சிக்க மாட்டோம் என்றும் அதிமுக, நாதகவை மறைமுகமாக தாக்கி விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் அதிமுக களத்தில் இல்லை என விஜய் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

செல்லூர் ராஜூ கூறியதாவது:- நாங்க களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள். வரப்போகின்ற தேர்தலில் நீங்க எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். இன்னைக்கு எந்தெந்த அதிகாரிகள் எல்லாரும் தப்பு பண்ணுகிறார்களோ அவர்கள் எல்லாரும் அதிமுக ஆட்சியில் நிச்சயமாக சிறை செல்வார்கள்.

நயன்தாராவுக்கு கூட கூட்டம் வரும்

அது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, விஏஓவாக இருந்தாலும் சரி.. தவறு செய்திருந்தால் சிறை தான். கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கூட்டம் கூடுகின்றது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. இவரைக் காட்டிலும் வடிவேலுக்கு கூட அதிக கூட்டம் கூடும்.

ஏன் நயன்தாராவை கூட்டிட்டு போங்க. அவருக்கும் கூட்டம் கூடத்தான் செய்யும். நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். விஜய்க்கு வேண்டுமானால் கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். மலேசியாவில் கூட விஜய் பேசுகிறார். நான் சினிமாவில் தொடர வேண்டுமா இல்லையா என விஜய்யே கேட்கிறார் அவர்களது ரசிகர்களிடம். மக்கள் இல்லை ரசிகர்கள் தான்.

எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது

டிரைலர் பார்த்தால் நல்லா தான் இருக்கும். ஆனால் படம் வந்தால் தான் தெரியும். இந்தியன் 2 படம் எல்லாம் எப்படி இருந்துச்சு. மக்கள் என்ன நினைத்தார்கள். எல்லாரும் எம்.ஜி.ஆராக மாற முடியாது. காவியத்தில் ராமச்சந்திரன் இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. வானில் ஒரு சந்திரன் தான். பூமியில் ஒரு ராமச்சந்திரன். அது எம்.ஜி.ஆர் தான்.

எம்.ஜி.ஆர் ஆக ஆகனும்னு நினைச்சா முடியாது. சும்மா பார்க்கிறதற்கு கூட்டம் கூடும். ஆனால் விஜய்யே இன்னும் மூன்று முறை வரட்டும். அப்புறம் கூட்டம் கூடுகிறதா என்று பார்ப்போம். நம்ம டி.ஆர். ராஜேந்தேரனுக்கு வந்த கூட்டத்தை பார்த்து தான், கட்சியே ஆரம்பித்தார். ஆனால் என்ன ஆனது. பாக்கியராஜ் ஆரம்பித்தார்.

கமல்ஹாசன் மாதிரி ஆகிட கூடாது

நம்ம கமல்ஹாசனே டிவியெல்லாம் ஒடைச்சாரே. ஊழலை எதிர்த்து பேசி கட்சி ஆரம்பித்தார். ஆனால் இன்னைக்கு ஒரு சீட்டுக்காக போயிட்டார். இது மாதிரி விஜய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தான் பார்க்கிறோம். ஓவர் கான்பிடன்ஸ் வைக்க கூடாது.

எங்களைப் பற்றி மோசமாக பேசுகிறவங்களுக்கு ஒன்னு சொல்கிறேன். அவன் எவனாக இருந்தாலும் சரி. நீங்க சொல்ற மாதிரி இருந்தால் எங்களுக்கு வேட்பு மனு விண்ணப்பங்கள் வாங்க அவ்வளவு பேர் ஏன் வரவேண்டும். எங்களுக்கு வேட்பு மனு விண்ணப்பங்கள் வாங்க எத்தனை பேர் வந்திருந்தார்கள் பார்த்தீங்களா. திருவிழா போல இருந்துச்சு அதிமுக தலைமை கழகத்தில். சில பேர் கடையை விரித்து வியாபாரம் ஆகாமல் கிடக்கிறாங்க. அதை மாதிரி ஆகிடாம.

நாவை அடக்கி பேச வேண்டும்

எங்கள் கட்சி களத்தில் இல்லை என்று சொல்கிற அளவுக்கு அவனுக்கு என்ன தைரியம் வந்துருக்கு. அது தவறு. நாவை அடக்கி பேச வேண்டும். நேற்று எங்கள் தலைவர் எடப்பாடியின் கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வந்திருந்தாங்க பார்த்தீங்களா. அவருக்கு என்ன முகம் இருக்கு. என்ன அடுக்கு மொழியில் பேசுகிறார். ஆனால் ஏன் அவ்வளவு பேர் வருகிறார்கள் என்றால், மக்கள் பிரச்சினையை பேசுகிறார். அதனால் தான் இவ்வளவு பேர் வருகிறார்கள். என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+