தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? டெல்லியில் என்ன நடக்குது? "அவர்" அடுத்த தலைவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக நேற்றில் இருந்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. நாமும் இது தொடர்பாக பாஜகவில் சிலரிடம் பேசினோம். பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.

தமிழ்நாடு பாஜகவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக லைம் லைட்டில் தமிழ்நாட்டில் இருந்த பாஜக சட்டென சைலண்ட் ஆகி உள்ளதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

annamalai

அண்ணாமலை பயணம்: ஒரு பக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு, சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று நீக்கப்பட்டார்.

அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார், என்று அண்ணாமலை அறிவித்தார்.

உட்கட்சி மோதல்; இது போக தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வந்தது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன் என்றெல்லாம் விமர்சனம் வைத்தார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அழைத்து கண்டிக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.

அண்ணாமலை ஆப்சென்ட்; இதற்கு இடையில் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.

தலைவர் மாற்றம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக நேற்றில் இருந்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. நாமும் இது தொடர்பாக பாஜகவில் சிலரிடம் பேசினோம். பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.

தலைவர் மாற்றம் உறுதியாகிவிட்டது என்றே நம்மிடம் பேசி பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரா .. நிரந்தர தலைவரா என்பது தெரியாது.

ஒரு மூத்த பெண் நிர்வாகியின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அவர் மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. ஆனாலும் அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலைதான் கட்சியை வளர்த்தார்.. இரண்டு இலக்கத்தில் வாக்கு வங்கியை கொண்டு சென்றது அவர்தான் என்ற பெருமை டெல்லிக்கு உள்ளது. அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது. மற்றபடி டெல்லி அவரை நம்பாமல் எல்லாம் இல்லை. அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.. ஆனால் அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது.

எனவே விரைவில் தலைவர் மாற்றங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஆனால் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+