மாறியது அண்ணாமலை பாடி லாங்குவேஜ்.. டெல்லி தந்த 2 ஆப்ஷன்.. போச்சு.. புட்டு புட்டு வைத்த புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை பாடி லாங்குவேஜ் மாறிவிட்டது. அவர் தலைவராக நீடிப்பது சிக்கலாகி உள்ளது கிட்டத்தட்ட தெரிய தொடங்கி உள்ளது. டெல்லியில் அவரிடம் 2 விஷயங்களை பேசி இருக்க வாய்ப்புகள் உள்ளன. 1 அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற போகிறேன் என்று சொல்லி இருக்கலாம். இல்லையென்றால் அண்ணாமலையே எனக்கு தலைவர் பதவி வேண்டாம்.. கூட்டணிக்கு அதுதான் சரி என்று அண்ணாமலை சொல்லி இருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் கூறி உள்ளார்.

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

அண்ணாமலை மாற்றம்

2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம்.

Is Annamalai losing the BJP chief job in Tamil Nadu What is Delhi planning

லட்சுமணன் பேட்டி

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. ஒன்றுபட்ட அதிமுக வர வேண்டும் என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதை எடப்பாடி கேட்கவில்லை. மற்ற விஷயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். எடப்பாடியை சமாதானம் செய்ய அமித் ஷா மீண்டும் முயன்று வருகிறார். அதாவது ஒருங்கிணைந்த அதிமுக பற்றி எடப்பாடி உடன் மீண்டும் அமித் ஷா பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இன்னொரு பக்கம் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று எடப்பாடி பேசி உள்ளார். அதாவது அண்ணாமலைதான் நன்றாக இருந்த கூட்டணி உடைய காரணம். அவர் எடுத்த முடிவால்தான் கூட்டணி உடைந்தது. கூட்டணி தலைவர்களை அவர்தான் கடுமையாக பேசினார். தவறாக பேசினார் . அதனால் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிசாமி சார்பாக வைக்கப்பட்டு உள்ளது. அவரை வைத்துக்கொண்டு கூட்டணி வைத்தால் சரியாக இருக்காது என்று எடப்பாடி கூறி உள்ளார்.

எடப்பாடிக்கு இது சாதகமாக மாறி உள்ளது. காரணம் மாநில தலைவர் தேர்தல், தேசிய தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதுதான் எடப்பாடிக்கு சாதகமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் மாநில தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதை காரணமாக வைத்து அண்ணாமலையிடம் சில விஷயங்களை சொல்லலாம் என்று அண்ணாமலையை டெல்லிக்கு வர சொல்லி உள்ளனர். எடப்பாடியை அமித் ஷா சந்திக்கும் முன் வரை அண்ணாமலை பதவி தொடரும் என்றே கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி சந்திப்பிற்கு பின் இதெல்லாம் மாறிவிட்டது.

Take a Poll

இப்போது அண்ணாமலை பேச்சு மாறி உள்ளது. அண்ணாமலை பாடி லாங்குவேஜ் மாறிவிட்டது. அவர் தலைவராக நீடிப்பது சிக்கலாகி உள்ளது கிட்டத்தட்ட தெரிய தொடங்கி உள்ளது. டெல்லியில் அவரிடம் 2 விஷயங்களை பேசி இருக்க வாய்ப்புகள் உள்ளன. 1 அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற போகிறேன் என்று சொல்லி இருக்கலாம். இல்லையென்றால் அண்ணாமலையே எனக்கு தலைவர் பதவி வேண்டாம்.. கூட்டணிக்கு அதுதான் சரி என்று அண்ணாமலை சொல்லி இருக்கலாம்.

இதனால் ஏதாவது ஒரு இரவில் அண்ணாமலை திடீர் என்று மாற்றப்படலாம். திடீர் என்று நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம். அல்லது வானதி சீனிவாசன் கூட நியமிக்கப்படலாம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+