ஒரு டீமே ரெடி.. ‘ஸ்கெட்ச்’ போட்ட எடப்பாடி.. “யார்னு காட்றேன்” அண்ணாமலை அஸ்திரம்.. சிக்னல் அங்கயாமே?
எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு குடைச்சல் கொடுப்பதால் அதிரடி முடிவை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் அண்ணாமலை.
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வந்த சூழலில், தற்போது அண்ணாமலையின் 'இண்டிகேட்டர்' ஓபிஎஸ் பக்கம் திரும்பியுள்ளது. ஈபிஎஸ்ஸின் ஆக்ஷனால் அப்செட்டான அண்ணாமலை, விரைவில் 'ரியாக்ஷனை' காட்டப்போகிறாராம்.
தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில நாட்களாக அடுத்ததடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி உடையும் நிலை உருவாகியுள்ளது.

கட்சி தாவல்
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அற்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தமிழ்நாடு தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம் என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிழைப்புவாதிகள்
பாஜகவில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலையின் ரைட் ஹேண்ட் என்று சொல்லப்படும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. நான்காண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர்களா? என்று அமர் பிரசாத் ரெட்டி சாடியிருந்தார்.

ரியாக்ஷன் உண்டு
"பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் நீங்கள் பெரிய கட்சி என நிரூபிக்க வேண்டுமா? ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு" எனச் சீறி இருந்தார் அண்ணாமலை. பாஜக அண்ணாமலை தரப்புக்கு பதிலடி கொடுத்த அதிமுக ஐடி விங் நிர்வாகி சிங்கை ராமசந்திரன் "நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கிவந்த நிலையில், 2021ல் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்துப் போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளியே வந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!" பதிலடி கொடுத்தார்.

அடுத்தடுத்து
இது பெரும் அனலைக் கிளப்பிய சூழலில், தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணனும் ராஜினாமா செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜக vs எடப்பாடி
பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்திற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். அதிமுகவினரும் பாஜகவினருக்கு எதிராக கருத்துகளை கூறியும் போராட்டத்தை நடத்தினர். இந்த சம்பவங்கள் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய நிர்வாகிகள் தாவல்
இந்தநிலையில் இன்றும் பாஜகவை சேர்ந்த உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். மேலும், சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இன்று இணைந்துள்ளனர். பாஜகவினரை அதிமுகவில் இணைப்பது அண்ணாமலையை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்தது பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்றும் மோதல்
ஈரோடு இடைத்தேர்தலின்போதும் பாஜகவுடன் உரசலில் இருந்து வந்தது எடப்பாடி தரப்பு. அதனால் தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயரை கூட இடம்பெறச்செயவில்லை. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்ட பிறகே மோடி, அண்ணாமலை படங்கள் சேர்க்கப்பட்டன. இருந்தபோதிலும், அதிமுகவிற்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பெருமளவு கிடைக்காத காரணத்தால் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு தேர்தலில் தோல்வி அடைந்தது. அதிமுகவினர் பிரிந்து இருந்ததால்தான் இப்படி ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று அண்ணாமலை விமர்சித்தார்.

எடப்பாடி முடிவு
இதனால், பாஜக இன்னும் ஓபிஎஸ்ஸை தன்னுடன் சேர்த்து வைக்கவே முயற்சிப்பதை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே, கூட்டணியில் இருக்கும் பாஜகவினரையே தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலையை தீவிரப்படுத்தினாராம். பாஜகவினரை அதிமுகவிற்குள் கொண்டுவர ஒரு தனி குழுவையே அமைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை உடைத்து அண்ணாமலைக்கு ஷாக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவது அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் பக்கம் இண்டிகேட்டர்
இதற்கிடையே தான் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை தேனி பெரியகுளத்திற்குச் சென்று சந்தித்துள்ளார் அண்ணாமலை. ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான நிலையில் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை, அவரிடம் அரசியல் ரீதியாகவும் உரையாடியதாகக் கூறப்படுகிறது. ஒருபக்கம், எடப்பாடி பழனிசாமி தனக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை சென்று சந்தித்துப் பேசியிருப்பது, பாஜக'இண்டிகேட்டரை' ஓபிஎஸ் பக்கம் போடுவதற்கான வேலை தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications